பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"எட்டியெடுப்பார். இந்தச் - சிகரெட்டுகளைப் புகைத்துக் கொண்டே இருப்பது இவருக்கு எப்படி வெறுக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. சாப்பிடாததால் இவரது முகம் - எல்லாம் " வற்றி வாடிப்போய் விட்டது; என்றாலும் இவர் புகைத்துக் கொண்டே இருக்கிறார்; ' இவருக்கு மனசுதான் சரி இல்லையே தவிர, உண்மையில் இவர் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்; இந்த மன நோய்தான் இவரை அரித்துத் தின்று கொண்டிருக்கிறது... என்னவிதமான' நோய் அது?' என்று நான் அந்த நோயின் காரணத்தை ஏற்கெனவே எனக்குள் ஊகித்துவிட்டு, அவளிடம் கேட்டேன். " அந்த மாது எனது சந்தேகங்களையே உறுதிப்படுத்தினாள். “நாங்கள் சென்ற வாரம் கூட்டுப் பண்ணையில் சேர்ந்தோம். அது தான். வேறென்ன? குதிரையை இவரே அங்கு கொண்டு போய் விட்டு விட்டார்; எங்களிடமிருந்த இரண்டு ஜோடி எருது களையும் மற்றும் பசுவையும் பொதுக் கால் நடைக் கொட்டி லுக்கு விரட்டிக் கொண்டு போய் அங்கு விட்டுவிட்டார். ஆடுகள் மட்டும்தான் எங்களிடம் இப்போது இருக்கின்றன, அந்தப் பிராணிகள் இல்லாமல் இந்த இடமே ஒரு இடு காடு மாதிரி இருக்கிறது. பிறகு அவள் முன் பக்கமாகக் குனிந்தவாறு மிகவும் ரகசிய மாகப் பின் வருமாறு கிசுகிசுத்தாள்: நேற்று இவர் வெளியே சென்று என்ன செய்தார் தெரியுமா? இவர் விறகுக் காக ஓர் ஆப்பிள் மரத்தையே வெட்டித் தள்ளி விட்டார். ஆமாம். அது ஒரு நல்ல மரம். இதை அறிந்ததும் நான் அப்படியே திணறிப் போனேன்-என் கணவருக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும்! இந்த மரம்தான் எங்களுக்கு எத்தனை இனிமையான ஆப்பிள் பழங்களைப் பருவத்துக்கு முந்தியே கொடுத்துக் கொண் டிருந்தது.! ஆனால் .. இவரோ இனிமேலும் எதைப் பற்றியும் வருந்துவதாகத் தோன்றவில்லை; அவருக்கு எதுவுமே தேவை யாகவும் இல்லை; இவையெல்லாம் வேறு யாருக்கோ (சொந்தமாக இருந்தாலும் கூட, இவருக்கு அதைப் பற்றிக் கவலையே இல்லை. கூட்டுப் பண்ணையில் சேருமாறு எவரும் இவரை நிர்ப்பந்திக்க - வில்லை; இவராகவே இவரது சொந்த விருப்பின் பேரிலேயே, , இவரது பெயரைப் பதிவு செய்தார். என்றாலும், இது இவரை . என்ன கோலத்துக்கு ஆளாக்கி - விட்டது, பாருங்கள். அந்தக் கூட்டத்திலிருந்து இவர் மிகவும் மகிழ்ச்சிகரமான மனோ

நிலையோடுதான் இங்கு வந்தார். வந்து என் னிடம் இவ்வாறு

157