பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குந்தியமர்ந்து கொண்டார். கதகதப்ல) ப உணர்ந்து கொண்ட அந்த ஆட்டுக்குட்டி மேலும் நெருங்கி வந்தது. அது சோர்ந்து வளைந்த தனது கால்களில் ஆடிக்கொண்டே நின்றவாறு, தனது தாயை மெதுவாக அழைத்துக் கத்தத் தொடங்கியது; இறுதியில் அது அந்தக் கிழவரின் காலடியில் மீண்டும் படுத்து, தனது புடைத்த மஞ்சள் நிறக் கண் களால் நெருப்பையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த நீண்ட, சாய்ந்த, உண்மையிலேயே. பயங்கரமான கண்களில் நெருப்புத் தழல்களின் வர்ணஜாலப் பிரதிபலிப்புக்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. இந்தப் பூச்சியைத்தான் பாருங்களேன். இது இப்போது தான் பிறந்தது; எனினும் அதற்குள் இதற்கு எங்கே இருந்தால் நல்லது என்பது தெரிகிறது என்று அந்தக் கிழவர் அந்த ஆட்டுக்குட்டியைத் தலையசைப்பால் - சுட்டிக் காட்டியவாறு மெல்லப் புன்னகை புரிந்தார். இப்போது அவரது நெடிய மெளனம் குலைந்து போய் விட்டதால், நான் அவரிடம் இவ்வாறு கேட்கத் துணிந்தேன்:

    • நீங்கள் ஏன் படுக்கையில் போய்ப் படுத்துத் தூங்க முற்பட்

வில்லை ? எனக்குத் தூக்கம் வரவில்லை. அதனால்தான்." அவர் தம் மனத்துக்குள் சுமந்து கொண்டிருந்த துயரம் பொங்கி வழியத் தொடங்கியது போலத் தோன்றியது. இனியும் அவரால் அதனை மெளனமாகத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே, அவர் அடிக்கொருதரம் தமது வருத்தம் தோய்ந்த குமிந்த கண்களால் என்னைப் பார்த்த வராய் தமது மனப் பாரத்தை என்னிடம் இறக்கி வைத்தார்,

  • கிழவர்கள் எப்போதுமே ஆழ்ந்து தூங்குவதில்லை; அதிலும்

இப்போது இருந்து வரும் நிலைமைகளில், அவர்கள் தூங்குவதே கிடையாது. எங்களது விவசாய வாழ்க்கையைப் பற்றிக் குமாஸ்தாக்களும், நகரவாசிகளும் மிகவும் அநாயாசமாக நினைத்து விடுகிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி நினைக்கக் கூடாது. அன்றொரு நாள் ஒருவர் எங்கோ போகிற வழியில் இங்கு வந்திருந்தார்; அவர் வட்டாரக் கேந்திரத்தைச் சேர்ந்த பிரதி நிதி, அப்போதுதான் நான் சேருதுகளையும் பசுவையும் கூட்டுப் பண்ணைக்குக் கொண்டு சென்றிருந்தேன், அப்போது அவர் என்னிடம் இவ்வாறு சு.றினார்: “'தாத்தா, இனி மேல் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். உங்களுக்கு உலகில் ஒரு

கவலையும் இராது. தொழுவங்களையெல்லாம் நீங்கள் கழுவிச்

159