பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனின் இதயத்தில் ஒரு சுமையாகவே இருப்பதில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ' ,

  • 'உதாரணமாக, எருதுகளை எடுத்துக் கொள்ளுங்கள்..

அவற்றுக்கு எவ்வளவு பராமரிப்பு தேவை என்பதை அறிந்தால் . நீங்கள் வியந்து போவீர்கள், கோடைப் பருவத்திலும் , அறுவடைக் காலத்திலும் அவற்றை இரவெல்லாம் இரைமேய விடவேண்டும்; அப்போதுதான் அவற்றுக்கு ஏராளமான பலம் இருக்கும்; மேலும், அ53) வ பொழுது விடிவதற்குள் எங்காவது வழி தவறிப் போய்விடக் கூடாதே அல்லது வேறு யாருடைய!. கோதுமை வயலையேனும் பாழ்படுத்திவிடக் கூடாதே என்ற பயத்தால் இரவெல்லாம் எங்களுக்குக் கண்ணே மூடாது: என்றாலும், நாங்கள் பகல் நேரத்திலும் உழைத்தாக வேண்டும். இவ்வாறு சேர்ந்தாற்போல் பல இரவுகள் நாங்கள் தூங்காது இருந்தால், எங்களுக்குக் குடிகாரன் போல் தள்ளாட்டம்தான் ஏற்படும்; அதனால் கையிலுள்ள கவட்டைக் கம்பும் கூடக் கீழே விழுந்து விடும். அது , அத்தனை கனமாக இருப்பதாகத் தோன்றும், இலையுதிர்காலம் வரும்போதோ, நாங்கள் இந்த எருதுகளோடு ஓய்வொழிச்சல் இல்லாது உழைக்க வேண்டி யிருக்கும்; மாரிக்காலம் முழுவதிலும் கூட இப்படித்தான். அப்போது இரவில் இரண்டு அல்லது மூன்று முறை எழுந்திருந்து , அவற்றைப் போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டும். தொட்டியில் நிறைய வைக்கோலைப் போட்டு வைக்க வேண்டும்; ஏனெனில் மாரிக் காலத்தில் இரவுகள் எல்லாம் நீண்ட இரவுகள். இதற்கா சு மாலையிலேயே. அவற்றுக்கு ஏராளமான தீனியை வைத்து விடவும் முடியாது; ஏனெனில் அவை அவற்றைத் தமது காலடியில் சிந்திச் சிதறி, ஏராளமான தீனியை வீணடித்து விடும். மேலும் எங்களிடம் இருக்கும் வைக்கோல், வசந்த ! பருவம் வருகிற வரையில் கையிருப்பு இருக்க வேண்டும். karரிக்காலத்துக்குப் பிறகு எருதுகள் எவ்வளவுதான் திடகாத்திர தான் இருப்பதாகத் தோன்றிய போதிலும், வசந்த பருவத் திலும் அவற்றுக்கு நாங்கள் சரிவரத் தீனி கொடுத்து வர வேண்டும். இல்லாவிட்டால், முதல் வெப்பக் காற்று வீசியதுமே அவை தடத்தில் படுத்துக் கொண்டு அசையாமல் சண்டித்தனம் பண்ணும். அப்போது அவற்றோடு எங்களுக்குப் பெரிய தொல்லை தான். இதை நான் நிச்சயமாக உங்களுக்குச் சொல்ல முடியும்.' '

  • 'குதிரை விஷயத்திலும் இப்படித்தான், அதற்கும் இதே

1.மாதிரி நல்ல பராமரிப்புத் தேவை. அதற்கும். நீங்கள் உரிய

காலத்தில் தண்ணீர் - காட்ட வேண்டும்; அதை, ' நன்றாகத்

161