பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- (தேய்த்துவிட வேண்டும், மேலும், இரவில் எங்கேனும் போவதற்கு முன்னால் நாங்கள் அதற்குத் தின்பதற்குத் தானியமோ அல்லது அரிந்து போட்ட தீவனமோ (கொடுத்தாக வேண்டும். ஒரு நல்ல விவசாயி தனது இரவை இப்படித்தான் -~அதாவது பராமரிப்பிலும் வேலையிலும்தான்--கழிக்கிறான், எனவேதான் அவன் ஒரு முயல் மாதிரி தூங்கக் கற்றுக் கொள் கிறான் : அவன் தூங்குவது போலத்தான் தோன்றும்; என்றாலும் அலன் காதுகள் மட்டும் எப்போதும் உஷாராகவே இருக்கும்; முதல் சேவலின் குரல் கேட்டதுமே அவன் படுக்கையிலிருந்து எழுந்து வேலைகளைத் தொடங்கிவிட வேண்டும்; படுக்கையில் சோம்பிக் கிடக்க அவனுக்கு நேரமே கிடையாது. 6 * எனக்கு நானே எஜமான் ஆன காலந்தொட்டு இந்த ஐம்பது ஆண்டுகளில் நான் இரவு முழுவதும் தூங்கும் பழக்கத் தையே விட்டு விட்டேன், இப்போதோ நான் தூக்கத்தையே அறவே இழந்து விட்டேன். முதலில் நான் லேசாகக் கண்ணயர் வேன்; ஆனால் நடுராத்திரி வாக்கில் விழித்துக் கொள்வேன். என் தூக்கமே போய்விட்டது. நான் இப்போது விழித்துக் கொண்டே இருக்கிறேன். நேற்றிரவிலும் கூட நான் சற்றே கண்ணயர்ந்தேன்; - என்றாலும் திடுக்கிட்டு விழித்தெழுந்து விட்டேன்; ஏனெனில் எருதுகளுக்கு இன்னும் கொஞ்சம் வைக்கோல் போட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் எனது வெற்றுக் கால்களைக் கம்பளிப் பூட்சுகளுக்குள் திணித்துக் கொண்டு, ஆட்டுத்தோல் கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டு, முற்றத்துக்குச் சென்றேன், தானியக் குதிர் இருக்கும் இடத்துக்கு அருகில் போனபோதுதான், எனது எருதுகள் பொது மாட்டுக் கொட்டிலில் இருந்தன என்பதும், இறுதியாக எனக்கு நிம்மதியான வாழ்க்கை வந்து விட்டது என்பதும் எனக்கு நினைவு எந்தது, , . இந்த நிம்மதியான வாழ்க்கையினால் எனது இதயமே நோற்று விட்டதை நான் உணர்ந்தேன். இது மோச பமான நோயைக் காட்டிலும் படுமோசமாக இருந்தது! '.

  • நான் நிம்மதியற்றுத்தான் தூங்கினேன், இரவில், நெடு

நேரம் கழித்து அந்தக் கிழவரின் புலம்பும் ஊமைக்குரலும் அவரது வெறண்ட இருமலும் கேட்டன, புரோக்கோஃபியேவிச் என்னைச் சூரிய உதயத்துக்கு முன்பே எழுப்பி விட்டார். சின்னக் சுணப்பு, அடுப்பில் கரித்துண்டுகள் சாம்பல் படர்ந்து மங்கிச் சுடர் விட்டன; அவற்றின் மீது சின்னஞ்சிறிய நீல நிற நெருப்புத் தழல்கள் குதூகலத்தோடு ஆடிக் கொண்டிருந்தன. அந்தக் கிழவர் தமது தணிவான பெஞ்சின் மீது அமர்ந்து, தமது

படுக்கையில் முதுகைச் சாய்த்தவாறே தாங்கிக் கொண்டிருந்தார்,

162