பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரது கை முன்னைப்போலவே அந்த ஆட்டுக்குட்டியைத் தொடுவதற்காகக் கீழே தொங்கிக் கொண்டிருந்தது; அவரது பெரிய, தடித்த, முடிச்சு விழுந்த விரல்கள் நடுங்கின; அவை அந்த ஆட்டுக்குட்டியின்' 'சுருண்ட ரோமத்தை லேசாகத் தடவிக் கொடுத்த ன. புரோக்கோஃபியேவிச்சின் காலடியோசையினால் தூக்கம் கலைந்த அந்தக் கிழவர் தூக்கத்திலேயே அசைந்து கொடுத்தார்; என்றாலும் அவர் தம் கைகளை மட்டும் அவை எங்கிருந்தனவோ அங்கேயே வைத்திருந்தார்; அதாவது அவருக்குச் சொந்தமாக விருந்த அந்தக் கடைசி அப்பாவிப் பிறவியான் அந்த ஆட்டுக் குட்டியைத் தூக்கத்தில் கூட விட்டுப் பிரிவதை எண்ணி : அவர் பயந்து நடுங்கு வது போல் தோன்றியது. அந்த ஆட்டுக் குட்டியின் ஜீவனுள்ள அன்புதான், ஒரு தனிப்பட்ட விவசாயி என்ற முறையில் அவரது அண்மைக் கடந்த காலத்தோடு அவருக்கு மிஞ்சிய ஒரே தொடர்பாக இருந்தது. .... . சென்ற இலையுதிர் பருவத்தில் நான் ஸ்டாலின் கிராடி விருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, இந்தக் கிழவரை நினைவு கூர்ந்தேன். கலாச்சுக்குச் சற்று அருகிலிருந்த கூட்டுப் பண்ணைகள் ஒன்றுக்கு நாங்கள் நள்ளிரவில் போய்ச் சேர்ந்தோம். அப்போது, 1 93 0-ல் நாங்கள் செய்ததைப் போலவே, இப்போதும் ஜy ன லில் விளக்கு வெளிச்சம் தெரிந்த அந்த ஒரே வீட்டுக்கே காரை ஓட்டிச் சென்றோம். இந்த வீடு புல்மண் டி வளர்ந்திருந்த ஓர் அகலமான தெருவின் , கோடியிலிரு ந்த சிறு குடிசையாகும், அந்த நிலவொளிக்காட்சியில் உள்ளத்தைத் தொடும் அருமை யா ன ஏதோ ஒரு சுகம் இருந்தது. நான் புதிதாக வெள்ளை யடிக்கப்பட்ட குடிசைகளைக் கொண்ட ஒரு வீதியையும், அவற்றுக்குக் காவல் காத்து நிற்பது மாதிரித் தோன்றிய நெட்டையா ன வொம்பார்டி. பாப்லார் மர வரிசை களையும் கண் டேன். ' காரோட்டி காரை நிறுத்தினார்; உடனே அருகிலுள்ள புல்வெளியிலிருந்து வரும் காஞ்சிரைச் செடியின் கசப்பு மணம் என் நாசித் துவாரங்களைத் தாக்கியது. காரின் விளக் ெகாளி ' அந்தத் தாழ்ந்த கபிலநிற வேலியின் மீதா கப் பாய்ந்து சென்றபோது, தமது தோள்மீது ஒரு கம்பளிக் கோட்டைத் தொங்க விட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதர் வெ ளி முற்றத்தில் காட்சியளித்தார், 'கண்ணைக் கூச வைக்கும் அந்த வெளிச்சத்து க்கெதிராக அவர் தமது கண்களைச் சுருக்கி

நெரித்துக் கொண்டு முற்றத்தின் படிகளில் கொதிக்" கெந்தி,

163