பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறங்கி வந்தார்; வரும்போதே அவர் இவ்வாறு குரல் கொடுத்தார்: 11 யாரது? கொலஸ்னிச்செங்கோவா? வாசலுக்கு வந்ததும் அவர் ஏமாற்றத்துடன் இவ்வாறு கூறினார்: “இல்லை, இது ஒரு சப்தணிகள் கார். சரி, யார் நீங்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? பார்த்தீர்களா? உங்களுக்கு ஒரு வீட்டுச் சொந்தக்காரர் வத்து விட்டார். ஆனால் வரும்போதே கடுமையாகத் தான் வருகிறார் என்று காரோட்டி வேடிக்கையாகக் கூறினார்: நாம் இன்னும் வாசலில் வந்து கூட். நிற்கவில்லை; அதற்குள் இவர் நம்மைக் கேள்விகள் கேட்கத் தொடங்கி விட்டார். மேலும் நாம் எதுவும் தெரிந்து கொள்வதற்கு முன் இவர் நம்மிடம் நமது சான்றுப் பத்திரங்களைக் காட்டுமாறு உத்தர விடுவார் போலிருக்கிறது. இங்கு எல்லோருமே இவ்வளவு கண்டிப்புத்தானா? - . கம்பளிக் கோட்டணி ந்த அந்த மனிதர் எங்களது காரின் கதவருகே வந்தார்; வந்து நல்ல சுமுக பாவத்துடனேயே இவ்வாறு கூறினார்:

  • நல்லது. உங்கள் சான்றுப் பத்திரங்களைக் காட்டுமாறு ,

தான் உங்களிடம் கேட்கவும் கேட்கலாம். நீங்கள் இரவு இங்கே தங்க உத்தேசிக்கிறீர்கள் என்று கருதுகிறேன், அப்படித்தானா? நல்லது, அதுதானே விஷயமெல்லாம், இப்போது அகாலமாகி விட்டது; நான் யோசனை சொல்லக் கூடிய இடமும் வேறில்லை, எனவே, நீங்கள் என்னோடுதான் தங்க வேண்டியிருக்கும். கேள்விகள் கேட்டதைப் பொருட்படுத்தாதீர்கள். அது ஒரு போர் முனைப் பழக்க வாசனை...மேலும், கூட்டுப் பண்ணையின் தலைவராக நான் இருப்பதால், கேட்பதற்கு எனக்கு அதிகாரமும் உள்ள து. ** அவர் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு விசாலமான படுக்கையில் ஒரு முதிய மாதும் இரு பிள்ளைகளும் தூங்கிக் கொண்டிருந்தனர். அவள் ஒரு கணம் தன் கண் களைத் திறந்தாள்; உட னேயே மீண்டும் கண்களை மூடி., படுமோசமாகக் களைத்துப் போய்விட்ட ஒரு நபரின் தன்னை மிஞ்சி வரும் ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கி விட்டாள். எங்களை வரவேற்றவர் மெழுகு வத்தி விளக்கின் திரியைக் கற்றுத் திருகி மேலேற்றினார்; பிறகு எங்களை உட்காரச் சொன்னார்; “ நீங்கள் என்னை மன்னிக்கத்தான் வேண்டும். ஆனால் நான் என் மனைவியை இந்நேரத்தில் எழுப்பப் போவதில்லை"

என்று தமது குரலைக் கிட்டத்தட்ட ரகசியம் பேசுவதுபோல்

164