பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாழ்த்திக் கொண்டு கூறினார் அவர்: அரசாங்க ஸ்டோருக்குத் தானியத்தை சப்ளை செய்யும் வேலையினால் அவள் மூன்று இரவு களாகப் படுத்துறங்கவே இல்லை. * ' ' ' சூரிய வெப்பத்தால் காய்ந்து கறுத்த அவரது - முகத்தின் 11 க்கவாட்டுக்களில் தெரிந்த நரை மயிரும், அவரது நெற்றியில் ஆழமாகக் கோடிட்டுத் தோன்றிய வ ரிக்கோடுகளும், அந்த மனிதரின் வாழ்க்கையொன்றும் சுலபமானதாக இருந்ததில்லை என்பதை எங்களுக்கு உணர்த்தின. அவர் தமது கால் விரல் முனைகளால் அரவமில்லாமல் நடந்து சென்று, ஒரு பால் ஜாடியைக் கொண்டு வந்து, மேஜை பூசன் எங்களோடு அமர்ந்து கொண்டார்..

  • 'இதனை நீங்கள் அருந்துங்கள், இப்போது ' என்னால்

கொடுக்க முடிந்த உண வெல்லாம் இது மட்டும்தான்.”

    • நீங்கள் நெடுநாட்களாகத் ' தலைவராக இருந்து

வருகிறீர்களா? என் று அவரிடம் கேட்டேன், ' . ' <3 1943 முதற்கொண்டு. எனது காலில் பட்ட காயத்தின் விளைவாக, நான் மருத்துவக் காரணத்தினால்' படையிலிருந்து விடுவிக்கப்பட்டு போர் முனையிலிருந்து இங்கு திரும்பி வந்தேன் . வந்த பின் விரைவிலேயே இந்தப் பண்ணையின் தலைவ னாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்." அவரது தோற்றத்திலிருந்து அவருக்குக் குறைந்தபட்சம் அறுபது வயதாவது இருக்க வேண்டும் என்று தெரிந்தது. எனது காரோட்டி அவரிடம் சற்று வியப்புடனேயே இவ்வாறு - கேட்டார்: “ நீங்கள் போர், முனைக்கு எப்படிப் போக முடிந்தது? உங்களைப் போன்ற வயசாளிகளைப் படையில் சேர அழைக்க வில்லையே." அந்த வீட்டுக்காரர் கருமயிரும் நரைமயிரும் கலந்திருந்த தமது மீசையைக் குதூகலமிக்க அநாயாச பாவத்தோடு தடவிக் கொடுத்தவாறு பல்லைக் காட்டிச் சிரித்தார்: " நீ அங்கு எப்படிப் போய்ச் சேர்ந்தாயோ, அப்படித்தான் நானும் போய்ச் சேர்ந்தேன், மகனே. என் வயதுக்கொத்த நடர்களைப் படையில் சேர்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், என்னால் இனியும் தாங்கிக் கொண்டிருக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டபோது, நான் 1942 ' கோடைப் பருவத்தில் ஒரு தொண்டர் படை வீரனாகச் சேர்ந்தேன். எங்கள் வட்டாரக் கட்சிக் கமிட்டியின் செயலாளர் என்னைப் பார்த்துச்

சிரித்து விட்டு, இவ்வாறு கூறினார்: “உங்கள் வயதில் நீங்கள்

165