பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த மாண வர்களிற் சிலர் ஷோலகோவின், பரிபூரணமான கலைத் திறனைத் திறம்பட அலசி ஆராயும் அளவுக்கு, அவரது எதார்த்த வாதத்தின் சாராம்சத்தையோ, மற்றும் சம்பந்தப் பட்ட கலா பூர்வமான, அழகியல் ரீதியான பிரச்சினைகளையோ இன்னும் போதுமான அளவுக்கு, அவற்றை ஆழமாகப் புரிந்து கொண்டிருக்கவில்லை. எனவே அவரது கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருந்த ஸ்தூலமான வரலாற்று ரீதியான சந்தர்ப்பச் சூழ்நிலைகள் பற்றிய பிரச்சினை போன்ற சில பிரச்சினைகள், நமது காலத்தின் தார்மிக மற்றும் அழகியல் தேவைகளின் கண்ணோட் டத்தில் அவர்களது செயல்களும், சிந்தனைப் போக்குகளும் எவ்வாறு இருந்தன என்ற விவாதங்களுக்கு இடம் கொடுத்து, இரண்டாம் பட்சமா ன ஸ்தானத்தையே பெற்றிருந்தன. ' என்றாலும், இந்த உண்மையிலேயே விவாதங்களின் பிரத்தி யேகமான மதிப்பும் அடங்கியிருந்தது. ஷோவகோவின் பாத்திர வடிவங்களுக்கும், மிகவும் பிரபலமான தற்கால ஜெர்மன் எழுத்தாளர்களது பாத்திரங்களுக்கும் நேரிடையான ஒப்பீடுகள் காணப்பட்டன. ஒரு கம்யூனிஸ்ட் தனக்கு அண்டையிலிருப் பவரின்பால் மேற்கொள்ளவேண்டிய பொறுப்புணர்ச்சியைப் பற்றியும் (1 என் நதி அமைதியாக ஓடுகிறது என்ற நாவலில் கிரிகோரி, மெலேகோவுக்கும், பூமிக்கேல் . . (கோஷிவாயிக்கும் இடை..யே நிலவும் உறவே இதற்கான ஆரம்பத் தூண்டுகோலாக விளங்கியது), எல்லா வழிகளும் ஒரு மனிதத் தன்மைமிக்க குறிக் கோளையே நோக்கிச் செலுத்தப்படுமாயின் அவை யாவற்றையுமே மனிதத் தன்மை மிக்கதாகத்தான் கருத. வேண்டுமா என்பதைப் பற்றியும், சோஷலிசத்தின் கீழ் துன்பியல் பிரச்சினை நிலவுகிறதா என்பதைப் பற்றியும், ஒரு பாத்திரத்தை “ 'ஆக்க பூர்வமான பாத்திரமாக்குவது எது- அந்தப் பாத்திரத்தின் நோக்கங்களும் செயல்களுமா, அல்லது செயல்கள் மட்டும்தானா-என்பது பற்றியும் (இது விஷயத்தில் வாதப் பிரதி வாதங்கள் நகுல்னோவ் பாத்திரத்தைச் சுற்றியே நிகழ்ந்தன), மற்றும் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றியும் விவாதம் எழுந்தது. உண்மையில் , இந்த இளம் ஆடவரும், பெண் டி.ரும் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையே மீண்டும் கண்டு பிடித்து வந்தனர்; ஏற்கெனவே கண்டுணரப்பட்டதையே தாமும் கண்டறிந்து வந்தனர். ஆயினும் பரவாயில்லை. முக்கிய Lபா7 விஷயம் என்னவெனில், அவர்களில் ஒவ்வொருவரும் 2.ண். மயைத் தாமாகவே தண்டறியவும், வாழ்க்கைப் பிரச்சினை,

களுக்குத் தீர்வு காணவும், தமக்காகவும் தமது காலத்தவர்:

9