பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கு போய் என்ன செய்ய முடியும்? அவர்கள் உங்களைக் காலாட்படைக்குத் தான் அனுப்பி வைக்கக் கூடும். தெரியுமா? அவ்வாறு சென்றால், அங்குள்ள இளைஞர்கள் முன்னால் நீங்களே உங்களை அவமானப்படுத்திக் கொள்வீர்கள். நீங்கள் இங்கேயே ஒரு கோஷ்டித் தலைவராக வேலை பார்க்கலாமே. நமக்குப் பின்னணியிலும் ஆட்கள் தேவைப்படுகிறது. இதற்கு நான் இவ்வாறு அவரிடம் பதில் சொன்னேன்: ' தோழர் செயலாளரே, ஜெர்மானியர்கள் எவ்வளவு பெரிய ஆக்கிரமிப்பைப் புரிந்திருக் கிறார்கள் என்பதைக் கண்ட பிறகு, இது சிரிப்பதற்குரிய நேர மல்ல. என்னைப் பற்றியே எனக்கு நிச்சயமில்லாவிட்டால், நான் இவ்வாறு சேர முன்வந்திருக்க மாட்டேன். கோஷ்டித் தலைவர். (வேலையைப் பொறுத்த வரையில், புத்திசாலிகளான நம் திதி) பெண்களில் எவரேனும்கூட அதனைச் செய்துவிட முடியும் . இப்போதே அவர்கள் நம்மை அதிகாரம் செய்து வரும் தோரணையைத்தான் பாருங்களேன்.' நல்லது, கடைசியாக நான் படையில் சேர்ந்தே விட்டேன். முதலில் அவர்கள் என்னை ஒரு ஸாப்பர் கம்பெனியில் டிரைவராக நியமிக்க விரும்பினர்; ஆனால் நான் என்னைக் காலாட்படைக்கு மாற்றுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். என் வயதுக்கு அது ஒன்றும் எளிதான வேலையல்லதான். ஆமாம், நான் சொல்கிறேன், அது எளிதான வேலையே அல்ல. என்றாலும், அதில் சேர்வதற்கு நானே விருப்பம் தெரிவித்ததால், நான் பல்லைக் கடித்துக் கொண்டு அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. நான் ஸ்டாலின்கிராடில் போரிட்டேன்; குர் ஸ்க் வரையிலும் கூட வந்தேன்; புரோக்கோரோவ்காவுக்கு வந்தவுடன் என்னைப் பொறுத்த வரையில் போர் முடிந்து விட்டது-மருத்துவக் காரணங்களால் நான் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டேன். துரதிருஷ்டம் தான். போனால் போகிறது, எனவே நான் படையில் ஒரே ஒரு வருஷம்தான் இருந்தேன்; எனினும் மூன்று முறை காயமடைந்து விட்டேன், மேலும் நான் முன்னைப்போல் இளமைமிக்கவனாகவும் இல்லை, தெரிந்தா?" தமது கதையின் இந்தப் பகுதிக்கு அவர் வந்ததும், அவர் கண்காண மிகவும் உற்சாகம் மிக்கவராக மாறி, சற்று உரத்து, குரலில் பேசத் தொடங்கி விட்டார்: < *இளைஞர்களுக்குக் காயம் பட்டால், இளம் மரங்களில் வெட்டுப் பட்டால் அவை எப்படி விரைவில் ஆறிவிடுகிறதோ. அப்படி அந்தக் காயங்கள் விரைவிலேயே ஆறி விடுகின்றன. ஆனால் கிழவன் - விஷயத்தில் அவை அப்படி ஆறுவதே இல்லை.

இதனை நான் என் அனுபவத்திலிருந்தே அறிவேன். இரண்டாம்

166