பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறை நான் காயம் பட்டபோது, என்னைத் தாம்போவிலுள்ள ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு தமது கால்களை இழந்துவிட்ட சில மனிதர்களும் இருந்தனர். அங்கு வயதான" வர்கள் தான் சோர்ந்து போய்க் கிடந்தார்கள், அவர்கள் மஞ்சள் நிறம் பார்த்துச் சுருக்கம் விழுந்த தமது முகங்களோடு இரவெல்லாம் வலியால் முனகிக் சொண்டும், அழுது கொண்டும், நிலை கொள்ளாமல் துள்ளிப் புரண்டுக் கொண்டும், இனி தமது குடும்பங்களை எவ்வாறு காப்பாற்றப் போகிறோம், நொண்டிகளாக எவ்வாறு வாழ்க்கையை எதிர்நோக்கப் போகிறோம் என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டும் அங்கு படுத்துக் கிடந்தனர். அவர்களது அசைவினால் அவர்களது உ.படுக்கைகள் இரவெல்லாம் கிரீச்சிட்டன. இயல்பாகவே, அந்தத் தூக்கமில்லா இரவு களில் அவர்களது சிந்தனைகளும் நொம்பலப் 1.Jட்டவையாகவே இருந்தன. ஆனால் அங்கிருந்த ஓர் இளைஞன்- அவன் அலட்டிக் கொள்ளவே இல்லை. அவனும்தான் பயங்க? மாக வருந்தினாள் என்பது உண்மை . ஆனால் அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான், - காலையில் அவன் கண் விழித்து எழுந்ததும், தன் மகான்றுகோல்களை யாரே எடுத்துக் கொண்டுபோய் விட்டார்கள் என்று அறியும் போது-அந்த ஆஸ்பத்திரியில் இருந்த அத்தனை பேருக்கும் போதுமான் ஊன்று கோல்கள் அ ங் கி ரு க் க வி ல் லை - அ வ ன் கவலைப்டர்.. மாட்டான், தான் எங்கு போக விரும்புகிறானோ, அங்கே எப்படி யாவது போய் விடுவான், அதாவது ஒற்றைக் காலால் துள்ளித் துள்ளி நொண்டியடித்துக் கொண்டும், கட்டில்களின் முதுகுச் சட்டங்களையோ அல்லது தனக்கு ஆதரவாகக் திட்டக் கூடிய எதையாவது பிடித்துக் கொண்டும் அவன் போய்விடுவான். அவ்வாறு அவன் நொண்டியடித்துச் செல்லும்போது, அவன் காதலைப் பற்றிய ஒரு சிறு பாட்டையும் கூடப் பாடுவான், இளமை என்றால் அப்படித்தான்! அவனைப் பார்க்கும்போது ' நமக்கு வருத்தம் ஏற்படும்; பொறாமையும் கூட ஏற்படும். ' நானும் இருபது அல்லது முப்பது - வயது குறைந்தவனாக இருந்திருந்தால் நானும் ஒரு குருவியைப் போலத் தத்தித் தத்தி நடக்கவும் செய்வேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டிருக்கவும் கூடும்."

  • 'சில சமயங் களில் ஓர் இளம் போர் வீரனை அந்த

ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்து சேர்க்கும் நேரத்தில், அவன் மிகவும் மோசமான நிலையில் கூட இருப்பான். ஆனால் இரண்டே : வார காலத்துக்குள்ளாகவே அந்தப் பீரங்கிக்குப் பிறந்த பயல். .

நர்சுகளை நோக்கிக் கண்ஜாடைகள் காட்டவும், குதிரையைப்...

167