பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போல் உஸ்யென்று மூக்கை உறிஞ்சிப் பெருமூச்சு விடவும், முகத்தைப் பல விதத்திலும் கோணலாக்கி வக்கணைகள் காட்டவும் தொடங்கி விடுவான். உதாரணமாக, அந்த மாதிரிக் கோர ணிகளை என் வயதில் நானும் கூட ஜென்மத்தில் செய்ய முடியாது. நாம் அவனைப் பார்த்து வியந்து கொண்டே. இருக்கலாம்! ஆனால் மிகவும் லேசான காயம்பட்ட வயதான போர் வீரனோ, எந்நேரமும் படுக்கையிலே படுத்துக் கிடப்பதன் மூலம் மனம் புளித்துப் போய் விடுவான்; அவன் டாக்டர் களை பும் நர்சுகளையும் நச்சரிப்பான்; தன்னையே நொந்து கொள்ளத் தொடங்கி விடுவான். என்றாலும், தான் பல நாட்களுக்கு முன்பே குணமாகி எழுந்து நடக்கத் தொடங்கி விட்ட போதிலும் கூட, மற்றவர்களுக்கு மிகவும் தேவைப்படும் கட்டிலை விடாமல் பிடித்துக் கொண்டு அதில் படுத்துக் கொண்டு, முகட்டையே , வெறித்து நோக்கி முகத்தைச் சுளித்துக் கொண்டே கிடப்பான். '. .

    • ஆயினும், நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்,

வயதானவர்களான நாங்களும் இந்தப் போரில் ஈடுபட்டோம் என்றால், அதற்குக் காரணம் எதிரி நமது சோவியத் ஆட்சியின் கீழ் நாம் அடைந்திருந்த ஆதாயங்கள் எல்லாவற்றையும் நம்மிடமிருந்து முழுமையாகப் பறிக்கப் போவதாக அச்சுறுத் தியதுதான். எனவேதான் நாங்களும் படையில் சேர வேண்டி wயிருந்தது, நீங்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.......

    • எனக்கும் கூட குண்டுச் சிதறலால் ஓர் , எலும்பு

நொறுங்கிப் போய்விட்டது; என்ன செய்தும், அவை ஒன்று சேரவே இல்லை. இது ஆறுவதற்கு ஏன் இவ்வளவு காலம் பிடிக்கிறது, ஒரு வேளை, பிளாஸ்டர் கட்டைச் சரியா?" அப் போ.வில் லைடா என்று டாக்டரிடம் நான் கேட்டபோது, அவர் உங்களுக்கு என்ன வயதாகிறது என்று என்னிடம் கேட்டார். ஐம்பத்தாறு என்று அவரிடம் சொன்னேன். இதைக் கேட்டதும், அவர் சிரித்தார்; பிறகு இவ்வாறு சொன்னார்: 'இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து நீங்கள் காயம்:டைந்தால், பிறகு உங்கள் எலும்புகள் என்றைக்குமே பொருந்திச் சேராது.' அப்படி யென்றால், இன்னும் இருபதாண்டுக் காலத்துக்கு நான் போரிட்டுக் - கொண்டே இருப்பேனா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன், நல்ல தொழில்தான்!

    • நான் அவரிடம் இவ்வாறு கூறினேன்: 'இல்லை, டாக்டர்

தோழரே! நான் இந்த தாஜிகளைச் சீக்கிரமே தீர்த்துக் கட்டியாக வேண்டும். முதலாவதாக, அவர்கள் என்னை மிகவும் வேதனை

யடையச் செய்து விட்டார்கள்; இரண்டாவதாக, நா னும்

168