பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேசி மகன்கள் பண்ணைச் சொத்தில் சரி பாதியைச் சுட்டுப் பொசுக்கியிருந்தனர்; எஞ்சிமிஞ்சியிருந்த கட்டிடங்களையும் நிலவறைகளைக் கட்டுவதற்காகப் போர்த்துப் பிடுங்கி இடித்துத் தள்ளியிருந்தனர்; பள்ளிக்கூடங்களுக்குத் தீ வைத்து விட்டனர்; எங்களிடமிருந்த நூற்றி எண்பது ஜோடி எருதுகளில் இரண்டு ஜோடிகள் மட்டுமே மிஞ்சியிருந்தன; குதிரைகளோ எதுவும் மிஞ்சியிருக்கவில்லை; எங்களிட மிருந்த டிராக்டர்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டு முடமாகிக் கிடந்தன. எனவே நாங்கள் எல்லாவற்றையும் அடிவாரம்பத்திலிருந்தே தொடங்க வேண்டி பிருந்தது. வயல்களில் வேலை பார்க்க எங்களிடமிருந்த மனித சக்தி எல்லாம் பெண்களும் பிள்ளைகளும் தான். டிராக்டர்களை ஓட்டவும் சிறுவர்களையும் சிறுமிகளையும் தவிர வேறு யாருமில்லை . அப்போது ஒரு முறை ஒரு வேடிக்கையான விஷயம் நிகழ்ந்தது: அது வசந்த காலம். நான் வயல் வழியாக நடந்து சென்ற போது, அங்கு ஒரு டிராக்டர் நின்று கொண்டிருப்பதையும், எனினும் அதன் இஞ்சின் மட்டும் ஓடிக் கொண்டிருப்பதையும் கண்டேன். சுற்று முற்றும் யாரும் கண்ணில் தென்படவில்லை. டிராக்டர் டிரைவருக்கும், அவரது டிரெய்லர்-வண்டிக்கான கையாளுக்கும் என்னதான் நேர்ந்திருக்கக்கூடும் என்று நான் அதிசயித்தேன். நான் அந்த வயலின் கோடியிலிருந்த மரங்களின் வ ரிசைக்குச் சென்றேன். அங்கு அவர்கள் இருவரும் வில்லோ மரங்களில் உயர் ஏறி அமர்ந்து கொண்டு, காக்கைக் கூட்டுகளில் முட்டைகளைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். அந்த இரண்டு பேருக்கும் பதினைந்து . வயதுதான் இருக்கும். அதற்கு மேல் இருக்காது, எனவே அவர்களிடமிருந்து நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? என்றாலும், அவர்கள் பெரியவர்களான இரு ஆடவர்கள் செய்யக்கூடிய வேலையைத் தாமே செய்தனர். உண்மையைச் சொன்னால், அந்த வேலை சகிக்க முடியாத அளவுக்குக் கடினமான வேலைதான். குளிர் மிகுந்த ஓர் இரவுக்குப் பின்னர், நீங்கள் டிராக்டருக்கு எவ்வளவுதான் சூடேற்ற முயன்றாலும், அதனைச் சூடாக்கி 'ஸ்டார்ட் செய்வது என்பது என்றுமே எளிதான காரியம் அல்ல, மேலும் பல சமயங்களில் யுவதிகளான 'இந்த டிராக்டர் டிரைவர்களில் ஒருத்தி, மண்கட்டிகளின் மீது தடுமாறிக் கொண்டும், கைகளைப் பரிதாபகரமாக ஆட்டிக் கொண்டும், வயலின் வழியாக இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலிருந்தும் கூட, என்னை நோக்கி வருவதை நான் பார்த்திருக்கிறேன், 'கோர்னி வாசிலியேவிச்,

தயவு செய்து நீங்கள் வந்து அந்தக் கைப்பிடியைக் சுழற்றுங்

170