பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • * நாங்கள் அப்போதுதான் குர்ஸ்க் போரில் ஈடுபட்டிருந்

தோம். நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஜெர்மன் மாங்கிகள் ஒரு கருமேகம்போல் திரண்டு வந்தன: நாங்கள் ஒரு கணம் கூட ஓய்வின்றி எங்களால் முடிந்த மட்டிலும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறையும் நாம் எப்படி உயிர் பிழைத்து வந்தோம். என்றே நாங்கள் அதிசயித்தோம். இந்தச் சமயத்தில்தான் அந்தப் பார்சல் வந்தது. நான் பதுங்கு குழிகளில் இருக்கும்போது, அங்கேயே அது என்னிடம் தரப்பட்டது, நீங்கள் நம்புவீர்களோ, மாட்டீர் களோ? அதைப் பெற்றதும் நான் அதனை வைத்துக் கொண்டு அழுது விட்டேன், நான் புகை பிடிக்கவில்லை; எனவே அந்தப் புகையிலைப் பை எனக்குப் பயன்படவில்லை; என்றாலும், பிஸ்கட்டுகளைத் தின்றேன்; அதன் மீது நான் கண்ணீர் சிந்தி னேன்.. இதோ ஒரு உழைக்கும் பெண்மணி, எங்களைப்போலவே இரவும் பகலும் ஓய்வின்றி, போர்முனையில் இருக்கும் எங்களுக் காக உழைக்கும் பெண்மணி இருக்கிறாள், மேலும் இவள் என்னைப்பற்றி நினைத்திருக்கிறாள் என்று நான் எண்ணமிட்டேன், ஒருவேளை அவள் தனக்கு வைத்திருந்த பிஸ்கட்டுகளையே துறத்து, அவற்றை எனக்கு அனுப்பியிருக்கவும் கூடும். அவளைப் பற்றி நான் இவ்வாறு எண்ணமிட்டவுடன், அந்த பிஸ்கட்டுகள் இன்னும் இனிய சுலையோடு இருந்தன... அவர் தமது நரையோடிய மீசையைத் தமது கைவிரல்களால் தொட்டுப் பற்கள் தெரியப் புன்னகை புரிந்தார். “ அது வேடிக்கையாகவும் இருந்தது. அவள் அந்தப் பார்சலைத் தயார் செய்தபோது, ஒரு வாலிபப் போர் வீரனைப் பற்றியே; மனத்தில் எண்ணியிருக்கக் கூடும். ஆனால் என்னைப் போன்ற ஒரு கிழட்டுப் பிறவிக்குத்தான் அது வந்து கிடைத் துள்ள து... ' . (* நமது பெண்கள் போரின்போது ஒரு பெருஞ்சுமையைத் தாங்கிக் கொண்டார்கள். தமது முயற்சி சோவியத் அரசுக்கு எவ்வளவு அதிகமாகத் - தேவைப்பட்டது என்பதைக் கண்டு கொண்ட அவர்கள், தம்மைப்பற்றிய 'எண்ணத்துக்கே இடம் ' கொடுக்கவில்லை. முதுமை தட்டிக் குழம்பிப்போன - எனது மூளையின் மூலம் நான் இதனை எப்படி உருவகப்படுத்திப் பார்க் கிறேன் தெரியுமா?--அவர்கள் தமக்குத் தாமே ஒரு நினைவுச் சின்னத்தைப் பெற்று விட்டார்கள்," , நான் சரியாக ஒரு மணி நேரம்தான் தூங்கியிருப்பேன்;

அதற்குள் ஒரு மோட்டார் காரின் ஹாரன் சத்தம்' என்னைத்

173