பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திடுக்கிட்டு விழிக்கச் செய்து விட்டது, அந்த வீட்டுக்காரரின் குரல் சமையற் கட்டி லிருந்து கேட்டது: <<கொலெஷ்னிசெங்கோ! நீங்கள் இங்கு வருவதற்கு இல் வளவு நேரமானால் எப்படி? நீங்கள் பலமணி நேரத்துக்கு முன்பே இங்கு வந்திருக்க வேண்டும். உங்கள் செளகரியத்துக்காக, 1&டிராக்டர் வேலை செய்யாமல் சும்மா கிடக்க வேண்டுமா? உங்களுக்குப் பொறுப்புணர்ச்சி சற்றும் இல்லை. என் பார்வைக்கு அப்படித்தான் தோன்றுகிறது, டயர் கள் ஒன்றும் நன்றாக இல்லை என்பதை நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் சொல்லாமலே அது எனக்கு நன்றாகத் தெரியும். நல்ல டயர்கள் உள்ள காரை யாரும் ஓட்டிவிட முடியும். மோசமான டயர் களை வைத்துக் கொண்டே, நீங்கள் நன்றாக வேலை செய்தால்தான் உங் களுக்குப் பெருமை, சரி, இனி சுறுசுறுப்பாக நடந்து கொள் ளுங்கள்; பெட்ரோலை எடுத்துக் கொண்டு வயலுக்குப் போங் கள்; பொழுது விடிந்து வெளிச்சம் வந்ததும் நான் விரைவிலேயே அங்கு வந்து விடுவேன் என்று செம்யோனிடம் சொல்லுங்கள். அவர் அறைக்குள் வந்தார்; விளக்கை ஏற்றாமலே அவரது படுக்கையின் மீது அமர்ந்தார்; பின்னர் ஒரு கிழவரைப்போல் மொறுமொறுத்துக் கொண்டு அவர் தமது பூட்சுகளை இழுத்துக் கழற்றத் தொடங்கினார். நான் மீண்டும் தூங்கத் தொடங்கி னேன்; எனினும் சீக்கிரத்திலேயே யாரோ ஜன்னல் கதனவப் பலமாகத் தட்டியதால் விழித்துக் கொண்டு விட்டேன்.

  • 'கோர்னி வாசிலியேவிச், உங்களைத்தான்! என்று ஒரு

மனிதர் உரத்த, கரகரத்த குரலில் அழைத்தார்: * இரண்டாம் கோஷ்டியிடமிருந்து வண்டிகள் வந்து சேர்ந்து விட்டன. நாங்கள் தானியத்தை இப்போதே பாரம் ஏற்றத் தொடங்கி விடலாமா அல்லது காலை வரையில் காத்திருக்க வா? எருதுகள் மிகவும் களைத்துப் போயிருக்கின்றன." அந்த வீட்டுக் காரர் ஜன்னலுக்கருகே சென்று, தணிந்த குர லில் இவ்வாறு உத்தரவிட்டார்;

    • தானியத்தை இப்போதே பாரம் ஏற்றிக் கொண்டு, புறப்

பட்டுப் போக வேண்டும் என்று அவர்களிடம் கூறுங்கள். ஒரு நிமிஷம் பொறுங்கள். தானியக் கிடங்குகளுக்கு நாமிருவரும் சேர்ந்தே போகலாம், - அவர். திரும்பி வந்த சத்தத்தை நான் கேட்கவில்லை, என்றாலும், மீண்டும் யாரோ வ ந்து. அவரை எழுப்பிய போதும் பொழுது இன்னும் இருட்டாகவே இருந்தது; என்றாலும் அவர் எழுந்திருந்து, எந்திரம் மற்றும் டிராக்டர் நிலையத்தோடு

தொடர்பு கொள்வதற்காகப் பண்ணை அலுவல கத்துக்குச் செல்ல

174