பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த மாரிக்கால் வயலும் கூட, இந்தப் பண்ணைக்குத்தான் சொந்தம்' என்று கூறினார் அவர். அவர்கள் எத்தகைய பயிரை வளர்த்திருக்கிறார்கள் என்று பாருங்களேன்! கோர்னி வா ஸி லியேவிச் இரவெல்லாம் மக்களைப் பற்றிப் புகழ்ந்து பேசிக் கொண்டேயிருந்தார்; ஆனால் நல்ல மக்களுக்கு ஒரு நல்ல தலைவனும் இருந்தால்தான், காரியங்கள் உண்மையிலேயே நல்லவிதமாக நடைபெறும் என்றே நான் சொல்லுவேன். அது மட்டும் நிச்சயம்” என்று அந்தப் பண்ணைத் தலைவருக்குப் பிடித்த மான அதே சொற்றொடரைத் தாமும் கூறி, ஒரு கெக்க லிச் சிரிப்போடு கூறி முடித்தார் அவர். குர்ஸ்க் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்தா ரி ஓஸ்கோல் வட்டாரத்திலுள்ள நோவி மிர் கூட்டுப் பண்ணையின் மிகவும் வயது முதிர்ந்த கோஷ்டித் தலைவியான பெலாஜியா வா ஸிலியேவ்னா மார்த்தினோவா தமது கண் முன் னாலேயே முளைத்து வந்த கோதுமைப் பயிர் நாற்றுக்கள் அழிந்துபட்ட காலமான 1946 ஆம் ஆண்டின் வறட்சிக் காலத்தின் கொடிய நாட்களை நினைவு கூர்ந்தார். முயற்சியெல்லாம் வீணாகப் போய் விட்டதைக் காண்பது பரிதாபமாகத்தான் இருந்தது என்றார் அவர்: ஆயினும் எங்கள் முயற்சியை விட்டுத் தள்ளுங்கள். அந்த வறட்சி கூட்டுப் புண்ணைக்கும், நாடு முழுவதற்குமே தீங்கிழைத்து விட்டது! அந்த வறண்டு சாய்ந்து வெடித்துப் போன பூமியைக் காண்பதே வேதனையாக இருந்தது; என் சொந்தக் கண்ணீரையே நான் அதற்கு நீராகப் பாய்ச்சத் துணியும் அளவுக்கு அந்த வேதனை இருந்தது! குர்ஸ்க் பிரதேசத்தைச் சேர்ந்த கூட்டுப் பண்ணை விவசாயி களின் ஒரு பெரிய கோஷ்டிக்கு, அவர்கள் 1947-ல் விளைவித்த அமோக விளைச்சலுக்காக அரசாங்கம் விருதளித்துக் கெளர வித்தது. அந்தக் கோஷ்டியில் பெலாஜியா மார்த்தினோவாவும் ஒருவர்; அப்பெண் மணிக்கு சோஷலிச உழைப்பு வீரர் விருது வழங்கப்பட்டது. அந்த விருதளிப்பு விழாவில் அவர் இவ்வாறு பேசினார்: இன்று நான் என் வாழ்க்கை முழுவதையும் ஒவ்வொரு நாளாக நினைவு கூர்ந்து பார்த்தேன். நான் என் பிள்ளைப் பருவத்தையும், எனது இல்லற வாழ்வையும் நினைவு கூர்ந்தேன். என் வாழ்வில் நான் சில நல்ல, ஆனந்தமயமான நாட்களை அறித் துள்ளேன்; என்றாலும், நான் இன்று உணர்கின்ற ஆனந்தம்

போல் வேறு ஆனந்தம் எதையும் நான் என் றுமே உணர்ந்த

179