பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்குமுறை காயமடைந்தார்; ஆயினும் ஒவ்வொரு முறையும் தாம் குணமானவுடனே அவர் மீண்டும் ராணுவ அணிக ளுக்கே திரும்பி வந்தார் நாங்கள் பொதுவாக வாழக்கையைப்பற்றி விவாதித்தோம்; வருங்காலம் பற்றிப் பேசினோம்; அவர் கூறிய விஷயம் இதுதான்: எனக்கு விசாலமான தோள்கள் உள்ளன; சோவியத் யூனியனுக்கும் அ வ் வ IT 6 ற உள்ளன. நாம் தாங்கிக் கொள்வோம்.....!!! 1949 நமது மாபெரும் நிர்மாணத் திட்ட நிலையங்களின் தலைச்சன் பிள்ளை (என்ற கட்டுரையிலிருந்து) ராஸ்தாவ்-ஆன்-டானிலிருந்து திசிம்லியான்ஸ்கி வரையில், வழியெங்கணும் ரோட்டின் இருமருங்கிலும், வசந்த பருவத்து வெள்ள நீரைப்போல் அலைபாய்ந்து கொண்டு, தானிய வயல்கள் பரந்து கிடக்கின்றன. எங்களது மகிழ்ச்சி ததும்பும் கண்ணின் பார்வை எட்டும் தூரத்துக்கு அப்பாலும், அவை அலைவீசி உருண்டோடுகின்றன. நாங்கள் எங்களது முன்னுாறு கிலோ மீட்டர் தூரக் கார்ப் பயணத்தின் போது வழியெல்லால் கண்டு களித்தது, நாட்டின் அமோக விளைச்சலில் ஒரு துளி மட்டுமே என்பதையும், இன்னும் நம்முன் காட்சியளிக்கும் இந்த வயல்கள் எல்லை காணாததாகவே உள்ளன என்பதையும், நாங்கள் அறிவோம்--என்பது உண்மைதான், நாங்கள் ஒரு குழந்தையாக வாழ்ந்த உலகின் சிறிய மூலையும் கூடத்தான், மிகப் பரந்ததாகவும் முடிவற்றதாகவும் தோன்றியது. ... ஜூலை மாதத்தில் வழக்கமாகவே மிகவும் பளீரென்று ஒளிர்ந்து அத்தனை பிரகாசமாக விளங்குவதும், மட்டுக்கு மிஞ்சிய தாராள மனோபாவத்தோடு இயற்கைத்தாயினால் வாரியிறைக்கப் பட்டதுமான வர்ண ஜாவங்கள், சூரிய ஒளி மிக வும் அரிதாகவே அவ்வப்போது பளிச்சிட்டு வெளிப்படும் அந்தச் சற்றே மப்பும் மந்தாரமுமான பகற்பொழுதில், இதமும் மிதமும் பெற்று எழிலோடு தோற்றுகின்றன. வடகிழக்கில் கல்லறை மேடுகளின் வரிசைகளுக்குப் பின்னால், ஒரு மழை மேகம் பாதி வானத்தை நிறைத்துள்ளது. ஒரு வானவில் தரையிலிருந்து மேல் நோக்கி நீண்டு செல்கிறது; என்றாலும், மேகங்களின் இருளார்ந்த அடர்த்தியைத் துளைத்துக் கொண்டு செல்ல அதற்குச் சக்தியில்லை;

எனவே அது மிகவும் உயரமான. தூண்கள் போலல்லாமல்,

182