பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மத்திய டான் நதியின் வலது கரையில் காவல் குன்றுகளும் கல்லறை மேடுகளுமாக, அத்தகைய மேடுகள் பல உள்ளன. அவை டான் நதிக்கரையின் மலைப் பாங்கான இடத்தில் நின்று, முன்னைப் பழங்காலத்தில் ரஷ்யாவின் மீது போர் தொடுக்கவோ அல்லது அதனைக் கொள்ளையடிக்கவோ 1.டைமூண்டு வந்த சேdfஜர்கள், பெச்செனெக்கு கள், பொலோவ்ஸ்திகள் ஆகிய கும்பல்கள் வந்த வழியான சமி வெ ளிப் பரப்புக்களை, நதிக்கு அப்பாலும் பார்வையைச் செலுத்திக் காவல் காத்து நிற்கின்றன. அந்தப் படையெடுப்பாளர்கள் தென்கிழக்கிலிருந்து - தனாய்ஸ் நதியின் (இதுதான் டான் நதியின் புராதனப் பெயராகும்) இட்டது கரையின் வழியாகவே சென்றார்கள்; அவர்கள் இந்த அழிக்க முடியாத நினைவுச் சின்னங்களையும் தாம் சென்ற வழியெல்லாம் விட்டுச் சென்றனர். - பத்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஸ்வியாதோஸ்லாவும், அவரது புரவலரும் சேர்ந்து நிலைகுலையச் செய்த சர்க்கெல் என்னும் புராதனமா என கோஜார் கோட்டை, இப்போது நிசிம் லியான்ஸ்கோயி கடல் என அழைக்கப்படும் செயற்கை ஏரிக்குள் மூழ்கியுள்ளது. கும்ஷாத் மலையிலிருந்து நாம் கீழ் நோக்கிப் பார்க்கும்போது, காடுகளின் பசுமைக்கு மத்தியில், விசித்திரமாக நெளிந்தும் திரிந்தும் செல்கின்ற, நமக்கு மிகவும் பழக்கமா ? , டான் நதியின் ஒடுங்கிய நீர்ப்பிர வாகத் தடத்தைக் கா ணயல், பரந்து விரிந்து செல்லும் ஒரு நீல நிறக் கடலையே நாம் காண நேர்கின்ற வேளையில், ஏதோ ஒரு விசித்திரமான உணர்ச்சி நம் இதயத்தைக் கவ்விப் பிடிக்கிறது; நம் தொண்டையிலும் ஏதோ எழுந்து வந்து அடைக்கிறது.... - போல்ஷிவிக் கட்சியின் உறுதிப்பாட்டின் மூலம்,-நமது மக்களின் இதயங்களில் கட்சி உருவேற்றியதும், அதன் மூலம் தமது - வீரஞ்செறிந்த முயற்சியில் ஈடுபடும் உத்வேகத்தை மக்களுக்கு ஊட்டியதுமான அந்த உறுதிப்பாட்டின் மூலம்-2.ரு வாக்கப்பட்டுள்ள எனது சொந்த நாட்டைச் சேர்ந்த டான் கடலே, உன் கீர்த்தி ஓங்குக! ' சோவியத் மக்களது மேதத்துவத்தின், உழைப்பின் அற்புதமான படைப்பான வால்கா-டான் கால்வாயே! நின் கீர்த்தி நிரந்தரமாகுக! வால்கா-டான் கால்வாய்க்கு, நமது கட்சியின், நமது சோவியத் அரசின் நிறுவனரான விளதிமிர் இலியிச் லெனினது. பெயர் வழங்கப்பட்டுள்ளது, இந்தக் கால்வாயின் வழியாக, நிலக்கரி, வெட்டு மரம், தானியம், எந்திரங்கள், காகிதம்

ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு, பல கப்பல்கள் செல்கின்றன.

184