பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஸ்திவாரங்கள் வெடிப்புக் கண்டு - உடைபடும் சத்தம் கேட்பதற்கே பயங்கரமாக இருந்தது. அந்தக் கிழவர் எல்லா வற்றையும் உணர்ந்துதான் சொல்லியிருந்தார்: புதுவெள்ளப் பெருக்கு டான் நதியின் வெள்ளக் காட்டு நிலங்களில் வெட்டிச் சாய்க்கப் பெற்ற மரங்களையும், மரக்கட்டைகளையும், மற்றும் குப்பை கூளங்களையும் வாரிக் கொணர்ந்து, அவற்றைப் பாலத்தின் கட்டுமானத் தூண்களின்மீது கொண்டு வந்து குவித்து, அவற்றையே இடித்துத் தள்ளிவிடுவதைப்.ோல் - பயமுறுத்தியது. பனிக்கட்டிப் பாறையை உடைத்தெறிய டிதான்டி வெடி மருந்து பயன்படுத்தப்பட்டது; என்றாலும், குப்பை கூளங்களும் மரங் களும் வந்து குவிவதை இதனால் தடுத்து நிறுத்த முடியவில்லை, அப்போது தான் அல் யாக்னின் நிர்மாணக் கோஷ்டியைச் சேர்ந்த நபர்கள் கைகளில் கோடரிகளையும் ரம்பங்களையும் ஏந்திக் கொண்டு, பாலத்திலிருந்து கீழே குதித்தனர்; வெறித்தனமாகச் சுழித்தோடிக் கொண்டிருந்த நீரில் இடுப்பளவு ஆழத்தில் நின்று கொண்டு, பாலத்தின் தூண்களுக்கிடையில் தண்ணீர் பாய்ந்து செல்வதற்கான ஒரு வழியை ஏற்படுத்துவதற்காக, அடிமரங் களையும், குப்டை! களங்களின் குவியல்களையும் துண்டு துண்டாக வெட்டித் தள்ளினர்.>> அல்யாகினும் சரி, அவரது கோ ஷ்டியைச் சேர்ந்த வேறு எவரும் சரி, இதன் பின் அந்த நிர்மாணத் தலத்தில் இருக்கவில்லை; என்றாலும், அவர்கள் யாரோடு, யாருக்காகத் தமது உயிர்களைப் பணயம் வைத்துப் பாடுபட்டார்களோ, அவர்கள் அந்தக் கோஷ்டியினர் புரிந்த அபாரமான சாதனையை நெடுங்காலம் நினைவில் வைத்திருப்பார்கள், அந்த நிர்மாணப் பணிக்கு மிகவும் நவ நவீனமான எந்திரங்களும், எந்திர க் கருவிகளும், தேவைக்கும் அதிகமான விதத்தில் மிகவும் ஏராளமான அளவில் வழங்கப்பட்டிருந்த போதிலும், கடினமான உடல் உழைப்புக்கும், பல சமயங்களில் மிகவும் இடர்ப்பாடுகள் மிக்க' உடல் உழைப்புக்கும், அங்கு எந்த விதத்திலும் இடமில்லாமல் போய் விடவில்லை, வசந்தத்துக்கு முந்திய புது வெள்ளப் பெருக்கின்போது, வெள்ள நீர் மதகுகளுக்கும் நீர்மின் நிலையத்துக்குமான அஸ்திவாரக் குழிகளுக்குள்ளேயே புகுந்து, தளவரிசைகளின் மீது போடப் பட்டிருந்த கற்களை அடித்துக்கொண்டு போய்விட்டது; அணை சுளுக்கான மண்ணை வாரிக்கொணரும் எந்திரக் கருவிகளின் குழாய்வழிகளையும் நாசப்படுத்தியது. இந்தக் குழாய்வழிகளைக் காப்பாற்றுவதற்காகத் தொழிலாளர்கள் தமது கழுத்து

வரையிலும் ஏறி நின்ற பனிக் குளிர்மிக்க நீரினுள் நின்று

188