பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபட்டனர். ஏற்பட்ட இடர்ப்பாடுகளையெல்லாம் அவர்கள் - தமது சொந்த முன்முயற்சியின் மூலமே துணிகரமாக நின்று சமாளித்தனர்; அது வெறுமனே உத்தரவுக ளுக்குக் கீழ்ப்படிந்து வேலை செய்யும் காரியமாக இருக்கவில்லை. மேலும், அணையின் வலது கரைப் பகுதியையும், திசிம் லியான்ஸ்க் நீர்மின் நிலையத்தின் அடி நீர் வடிப்புக்கான அணையையும் அவர்கள் காப்பாற்றியே முடித்தனர். ' '. டான் நதியின் பிரதானப் பிரவாகத்தைத் தடுப்பு மதில் எழுப்பி வேறுபக்கமாக மேலேறிப் பாய்: வகை செய்யப் பட்டிருந்தாலும், மூல நதியின், இப்போது குறுக்கப்பட்டுவிட்ட டான் நதிக் கால்வாயை அணையிட்டுத் தடுப்பதொன்றும் ' எளிதான வேலையாக இருக்கவில்லை. அதில் ஆயிரக்கணக்கான மக்களும், மண்ணை வாரிக்கொட்டும் . எண்ணற்ற டிரக் வண்டிகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்த எR',. மேலும், கட்டுமானத் தொழிலாளர்களைத் தவிர, அந்த வட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்கள் மற்றும் ஸ்தானித்பாக்களில் வசித்து , வரும் மக்களும், தம்மால் முடிந்த மட்டிலும் எந்த வ ைகயிலாவது அதற்கு உதவவும் முன்வந்தனர். அது ஓர் இருள் சூழ்ந்த இரவு; எண்ணிறந்த மின்சார விளக்கு களும், பேரொளி' பாய்ச்சும் விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன, இந்தப் பகுதிக்குப் பொறுப்பு வகித்து வந்த ஃபியோதர் இவானோவிச் ரெஜ்சிகோவ், மேற்பார்வையிடும் பணிக்கென்றே பலகைகளைக் கொண்டு கட்டப்பட்டிருந்த குடிசையான தமது , மேற்பார்வையிடும் நிலையத்திலிருந்து கீழ் நோக்கிப் பார்த்தவாறே, இத்தனை படு வேகத்தில் டிரக் வண்டிகளில் கற்களை ஏற்றி வருபவை மண்வாரி எந்திரங்களின் வாளிகளா, அல்லது ஆயிரக்கணக்கான மனிதக் கரங்களா என்று தம்மால் கூற முடியவில்லை என்று என்னிடம் கூறினார், , இந்த ' அணைகட்டும் வேலையைத் திரைப்படம் எடுக்க. வந்திருந்த செய்திப்படத் தயாரிப்பாளர்களுக்கு மிக மிக வேடிக்கையான அனுபவம் ஏற்பட்டது. அவர்கள் அந்த நிகழ்ச் சியையே காணத் தவறிவிட்டனர். ஏனெனில், டான் நதியில் அணை போட்டு முடிப்பதற்கு அறுபது மணி நேரம் ஆகும் என்று அவர் கள் கணக்குப் போட்டிருந்தனர்; ஆனால், உண்மையில் அந்த வேலை எட்டே மணி நேரத்தில் பூர்த்தியாகி விட்டது. அவர்கள் அதிகாலையில் அங்கு வந்து சேர்ந்தபோது, எல்லாமே முடிந்து போயிருந்தது. அவர்கள் இன்னது செய்வதெனத் தெரியாமல், நதிக்குச் செல்லும் வழியையே மறித்துக் கொண்டி

ருந்த கற்களாலான மதிலை வியப்போடு வெறித்து நோக்கிக்

189