பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டிருந்தனர். அந்த நிர்மாணப் பணி பின் அரசியல் பிரிவின் தலைவரான அலெக்சி கவ்ரிலோவிச் செர்க்காஸோவ், ஏமாந்து மனம் சோர்ந்துபோன அந்தக் காமிராக்காரர்களோடு சேர்ந்து தாமும் வருத்தப்பட்டார்; எனினும் அவர் பின்வருமாறு அவர் களிடம் கூறியபோது, அவரது கண்களில் ஒரு குதூகலமிக்க ஒளி மினுமினுத்தது: • எஉண்மையிலேயே இது அவமானம் தான்! இந்த வேலை முடிய அறுபது மணி நேரம் ஆகும் என்று தான் கருதப்பட்டது. ஆனால், படுபாவிகளான இந்தக் கட்டு 1.மானத் தொழிலாளர்கள் வேலையில் முழு மூச்சுடன் இறங்கி, இதனை எட்டே மணி நேரத்தில் முடித்து விட்டனர். நான் உங்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்: எனினும் எப்படி உதவ முடியும் என்பதுதான் எனக்குப் புலனாக வில்லை. வேண்டுமென்றால், நாங்கள் இந்த அணையைத் தகர்த் தெறிந்து விட்டு, மீண்டும் அதனை ஆரம்பத்திலிருந்து கட்டத் தொடங்கலாமா? இது நிலைத்து இருக்கவேண்டும் என்பதற்காகக் கட்டப்பட்டுள்ளது; எனவே இதனைத் தகர்த்தெறிவது பரிதாபத் துக்குரிய செயலாக இருக்காதா? உங்கள் ஏமாற்றத்தைக் கண்டு நானும் உங்களோடு அனுதாபம் கொள்கிறேன்; என்றாலும், உங்களுக்கு உதவக்கூடிய விதத்தில் நான் எதுவும் செய்ய முடியாது என்றே அஞ்சுகிறேன். அந்தத் திட்ட நிலையத்தின் டைரக்டர் வாளிலி அர்செந்தி யேவிச் பராபனோவ், ஏனைய இஞ்சினீயர்களோடு சேர்ந்து கரை மீது நின்று கொண்டிருந்தார்; அவர் தமக்கு ஏற்பட்ட இயல் டான உணர்ச்சிப் பரவசத்தை, மனோவுறுதியின் தலையாய பலத்தின் மூலமே கட்டுப்படுத்தி வைத்திருந்தார். கிராமவாச்சி கனில் முதியவர்கள், தாம் எக்காலமும் கண்டு வந்துள்ள தொல்லை கொடுக்கும் டான் நதியைத் தம் முன்னால் காணாமல், இனிமேல் மக்களின் தேவைகளுக்குப் பயன்படப் போகும் ஒரு வசப்படுத்தப்பட்ட அமைதியான நதியைக் கண்டதால், ஆனந்தக் கண்ணீர் வடித்து அழுதனர். லெனின் கிராடு நகர இஞ்சினீயரான செர்ஜி கிரிகோரியேவிச் பெத்ரோவையும் நான் சந்தித்தேன்; ஒரு விரும்பத்தக்க, வெளிப்படையா ன உழைப்பாளியின் முகத் தோற்றத்தைக் கொண்ட மிகவும் அருமையான நபர் அவர். நமது நாட்டின் தொலை வடக்குக்கும், மற்றும் தொலை தெற்கு, கிழக்கு மேற்குத் திசைகளுக்கும் புறப்பட்டுச் சென்று, அங்கு பதினாறு நீர்மின் நிலையங்களை நிர்மாணித்ததில் அவருக்கும் பங்கு இருந்தது. ஒரு திட்ட நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்துக்கு

என்று அவர் எப்போதும், எங்காவது போய்க் கொண்டே

190