பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களின் நன்மைக்காக இத்தகைய பெருமளவில் நிர்மாணப் பணியைத் தொடங்குவது பற்றி எந்தவொரு முதலாளித்துவ நாடும் கனவு கூடக் காண முடியாது. மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியை மாற்றியமைப்பதற்கான பிரம்மாண்டமான திட்ட மொன்றை அயல் நாட்டு இஞ்சினீர்கள் ஒரு காலத்தில் தீட்டி னார்கள். அவர்கள் ஜிப்ரால்டர் ஜலம்: ந்தியையும் டார்டனெல்ஸ் ஜலசந்தியையும் அணைகட்டித் தடுத்து , கடலின் நீர் மட்டத்தைக் குறைத்து, மிகப்பரந்த செழிப்பான நிலப்பகுதிகளை வெளிக் கொ ணர வேண்டும் என்று யோசனை கூறினர். ஜிப்ரால்டர் அணையின் மீது கட்டப்பெறும் ஒரு மின்விசை நிலையம், சகாரா பாலைவனத்தின் 5,000,000 சதுர கிலோமீட்டர் பரப்பையும் பூத்துக் குலுங்கும் மலர்த் தோட்டமாக மாற் றும். அளவுக்குச் சக்தி படைத்த வலிமைமிக்க மின்னாற்றல் வளமாக விளங்கும். இதற்காகும். மொத்தச் செலவும் முதலாம் உலகப் போருக்கு ஆன செலவைக் காட்டிலும் பதினைந்து மடங்கு குறைவாகவே இருக்கும். ஆனால் முதலாளித்துவ நிலைமைகளின் கீழ், மனித குலத்துக்கு மிகப்பெரும் பயன் விளைவிக்கக்கூடிய இத்தகைய திட்டங்கள் நிறைவேற இயலா: தல) வழLin"கவே உள்ளன. முற் டோக்கா ன மனம் படைத்த நபர்களின் விஞ்ஞான மற்றும் இஞ்சினீயரிங் சிந்தனையின் பயன்களை, முதலாளித்துவம் தனது

  • திட்டங்களின் கல்லறை களிலேயே புதைத்து விடுகிறது.

விளதிமிர் இலியச் லெனின் இவ்வாறு எழுதினார்: “'ஒருவர் எல்லாப் பக்கங்களிலும், ஒவ்வொரு கட்டத்திலும் மனிதனால் உடனடியாகத் தீர்வுகாண முற்றிலும் சாத்தியமான பிரச்சினை களையே சந்திக்கிறார்; ஆனால் முதலாளித்துவம்தான் அதன் வழியில் குறுக்கே நிற்கிறது. அது ஏராளமான செல்வத்தைக் குவித்து வைத்துள்ளது-அதே சமயம், மனிதர்களை இந்தச் செல்வத்தின் அடிமைகளாக மாற்றி வைத்துள்ளது. அது மிகவும் சி) க் க ல ா ன தொழில் நுட்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளது. அதே சமயம், லட்சோப லட்சக் கணக்கான மக்களின் வறுமை மற்றும் அறியாமையின் காரணமாகவும், விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில கோடீசுவரர்களின் முட்டாள்த் தனமான பேராசையின் காரணமாகவும், அது தொழில் நுட்ப அபிவிருத்திகளைப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்தியுள்ளது." நமது வால்கா -டான் கால்வாய் சமாதானத்துக்காகவும் மக்களின் மகிழ்ச்சிக்காகவும் கட்டப்பட்டுள்ளது. அதன் மூலம் 2, 750,000 ஹெக்டர் பரப்புள்ள 'வறண்ட நிலங்களுக்கு நீர்ப்

பாசனம் செய்யப்படும். மிக மும்முரமாக வளர்ந்து வரும் நமது

192