பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவில் இருந்து வரும், மேலும் தாய்மார்கள் அவர்கள் இதனை ஒப்புக் கொள்ள விரும்பா விட்டாலும் கூட-எப்போதும் தமது தலைக் குழந்தையை மிகவும் சிறப்பாகவே நேசிப்பார்கள். மக்களே, நமது ஞானமிக்க போல்ஷ்விக் கட்சியின் சிந்தனை கள் யாவும் யார்மீது குவிந்திருக்கிறதோ, அந்த எனது அருமை நாட்டு மக்களே, சமாதானத்துக்காகவும் மகிழ்ச்சிக் காகவும் நீங்கள் கட்டியமைத்து உருவாக்கியுள்ள உங்களது மாபெரும் படைப்புக்களைக் குறித்து நீங்கள் பூரித்து மகிழ எவ்வளவோ காரணம் உண்டு! ரஷ்யாவை மின்சார மயமாக்குவதற்காக லெனினது மேதத் துவத்தில் பிறப்பெடுத்த திட்டத்தை, { சோவியத் மக்கள் உள் நாட்டு யுத்தம், ஏகாதிபத்தியத் தலையீடு, பொருளாதாரச் சீர்குலைவு ஆகியவை நிலவிய, நம்புதற்கே அரிய மிகவும் சிரமமான நிலைமைகளின் கீழ் தொடங்கி வைத்தனர். முதல் ஈராண்டுகளில் வெறுமனே 12,000 கிலோ வாட் திறன் அளவைக் கொண்ட மின் நிலையங்களே இயக்கி வைக்கப்பட்டன. அது வரையில் எழுதப்பட்டிருந்த விளைவுகளும் மிகமிகக் குறைவாகவே இருந்தன. என்றாலும், தமது வீரஞ்செறிந்த குடி.மைக் கடமையை நிறைவேற்றுமாறு சோவியத் மக்களுக்கு அறை கூவல் விடுத்த லெனின் இவ் வாறு கூறினார்: பன்னிரண்டாயிரம் கிலோ வாட் என்பது மிகவும் - குறைந்த தொடக்கம்தான். அமெரிக்காவில், ஜெர்மனியில் அல்லது ஸ்வீடனில் நிகழ்ந்துள்ள மின்மயமாக்கம் பற்றித் தெரிந்து வைத்துள்ள அயல் நாட்டினர் ஒருவருக்கு இது? - வேடிக்கையாகக்கூடத் தோன்றலாம், என்றாலும், கடைசியில் சிரிப்பவனே நன்றாகச் சிரிப்பான். ** நாம் நமது மாபெரும் நிர்மாணத் திட்ட நிலையங்களைக் கண்டு களிப்படையத்தான் செய்கிறோம். மேலும் நாம் புன்னகையும் புரிகிறோம்; எனினும் எந்தவிதமான "குறுகிய மனப்பான்மையோடும் அல்ல: ெவ ற் றி யா ளர் க ளி ன் புன்னகையையே, மனித குலத்தின் வருங்கால மகிழ்ச்சியில் திட நம்பிக்கை கொண்ட மக்களின் புன்னகையையே நாம் பூக்கிறோம், 1952 எனது கட்சியே! நீ நீடூழி வாழ்க! ஆழமான விசுவாச உணர்வோடும் நன்றியுணர்வோடு 14, நமது நாட்டு உழைக்கும் மக்கள் சோவியத் கம்யூனிஸ்டுக் ,

கட்சியின்' 50 ஆவது பிறந்ததின விழாவைக் கொண்டாடு:

195