பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றியினால் ஏற்பட்ட வியப்பினாலும் பெருமிதத்தாலும் எனக்குப் பேச்சே வரவில்லை. கரப்ரல் 12, 1951 மனித குலத்தின் தீபஸ்தம்பம் மனித குலத்தின் வருங்காலத்தைப் பற்றி அக்கறை கொள் ளும் ஒவ்வொருவரும் சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியின் நிகல் திட்டத்தைக் கவனமாகப் படித்திருக்கத் தான் வேண்டும்; இப்போது நம்மில் ஒவ்வொருவரும் இந்த வரலாற்று பூர்வமான தஸ்தாவேஜியைப் பற்றி அவர வர் தம் சொந்த வார்த்தைகளில் பேககிருேம். சிந்தனைப் படிமங்களிலேயே எண்ணிப் பார்க்கும் கடமையைக் கொண்ட ஓர் எழுத்தாளனாக இருக்கும் நான், அதைப் பற்றி இவ்வாறே கூற விரும்புகிறேன்: முற்காலத்தில் இவ்வாறு நிகழ்ந்தது : அதாவது ஒரு வழிப்போக்கரான நீங்கள் போகும் வழியில் இரவு வந்து பொழுது இருண்டு விட்டால், அந்நேரத்தில் (தொலைவில், அடிவானத்துக்கருகே வெகு தொலைவில், ஆடு மேய்ப்பவர் ஏற்றி வைத்த கணப்புத் தீயின் மினு க்கொளியை நீங்கள் கண்டால், அவ்வளவு தூரம் போக வேண்டுமா என்று நீங்கள் நினைப்பீர்களேயானால், நீங்கள் அதனைப் போய்ச் சேரும் முன்பே, களைப்பினால் செத்து விழுந்துவிடுவீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்... இப்போது நகல் திட்டமும் நம் அனைவருக்கும் அத்தகைய பிரகாசமான தீபஸ்தம்பத்தின் ஒளியாகவே விளங்குகிறது; நாம் அனைவரும் செய்ய வேண்டியது என்னவெனில், அதனை நோக்கி உறுதியோடு நடை போட்டுச் செல்ல வேண்டும்; அவ்வாறு சென்றால், செல்லும் வழியும் கூட. அத்தனை தொலை நீளமாக இராது ...போவது என்பது சற்றுக் கடினமான து என்பது உண்மையே. ஆயினும் போற்றி வளர்க்கப்படும் எந்தவொரு லட்சியமும் எளிதில் அடையக் கூடியதாக என்றேனும் இருந்திருக்கிறதா? சிவஷென்ஸ் கரியா,

ஆகஸ்ட் 4, 1951

200