பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிக்க முடியாத தொடர்பைப் பற்றியும், நவீன ,கத்தில் இலக்கிய வளர்ச்சியோடு சம்பந்தப்பட்ட முதன்மையான பிரச்சினைகளைப் பற்றியும், கலைஞனின் தார்மிக உருவாக்கம் பற்றியும், மக்கள் முன் அவனுக்குள்ள கடமையைப் பற்றியும் தமது இளம் சகாக்களோடு உரையாடிய சமயத்தில், ஷோலகோவ் இளம் எழுத்தாளர்களை எமது இலக்கியத்தின் நம்பிக்கை எனக் கூறினார்; இளம் எழுத்தாளர்களுக்கும், முது பெரும் எழுத்தாளர்களுக்கும் இடையே படைப்பாக்கத் தொடர்புகள் பலப்பட வேண்டியது அத்தியாவசியமாகும், சோவியத் இலக்கியத்தின் தலைசிறந்த மரபுகளை வழுவாது , பிறழாது பின்பற்றுமாறும், முதலாளித்துவ சித்தாந்தத்தின் எந்தவொரு வெளிப்பாடுகளின்பாலும் விட்டுக் கொடுக்காத போக்கை மேற்கொள்ளுமாறும் அவர் வளர்ந்து வரும் (சோவியத் எழுத்தாளர் பரம்பரைக்கு அறைகூவல் விடுத்தார்; மேலும், சமுதாயத்தின் முன்னால் இடையறாது வளர்ந்தோங்கி வரும் கலைஞனின் பொறுப்பைக் குறித்தும், கட்சி மற்றும் மக்களின் நலன்களின் பால் சோவியத் எழுத்தாளர் கொள்ளும் ஆழ்ந்த ஈடுபாட்டைக் குறித்தும் அவர் பேசினார். பல்வேறு .படைப்பாக்கப் பிரச்சினை களைக் குறித்து அபிப் பிராயங்களைத் தாராளமாகப் பரிமாறிக் கொண்டிருந்த சமயத்தில், தவறுகளை இழைப்பதற்கு எழுத்தாளனுக்குள்ள உரிமை பற்றிய பிரச்சினையின் பால் உரையாடல் திரும்பியது. ஷோ லகோவ் இந்தப் பிரச்சினையின்பால் பிரத்தியேகமான கவனத்தைச் செலுத்தினார்: எந்த ஓர் எழுத்தாளரும்-அவரது கீர்த்தி அல்லது வயது எதுவாக இருந்த போதிலும்-அவர் த.மக்குத் தாமே ஒரு சலுகை மிக்க ஸ்தானத்தைக் கோரக் கூடாது என்றே நான் கருதுகிறேன். ' தவறுகள் இழைப்பதற்கான சுதந்திரம்' பற்றிய விஷயத்தில், கூட்டுப் பண்ணைக் கோஷ்டியின் தலைவர் ஒருவர் ஒரு தவறு புரிந்தால், அந்தப் பண்ணையின் தலைவர், எப்போதுமே அவரைத் திருத்திச் சரியான பாதையில் செலுத்தி விடுவார். இது ஒரு வட்டாரத் தன்மை வாய்ந்த த வ றகும்; இது ஏனைய வட்டார மக்களுக்குத் தீங்கு இழைக்காது. வெளியிடப்பட்ட ஒரு நூலில் ஒரு தவற்றைப் புரிந்து விடும் எழுத்தாளன், ஆயிரக் கணக் கான வாசகர் சளைத் தவறான வழியில் இட்டுச் சென்று விடுகிறான்; நமது தொழிலின் ஆபத்து இதில்தான் அடங்கி யுள்ளது. ஆன்ம சுதந்திரம், படைப்பாக்கச் சுதந்திரம் ஆகியவை யெல்லாம் மிகவும் நல்லவைதாம்; என்றாலும், தயவு செய்து, '.

நாடர். தவறுகளைக் குறித்து, மிகவும் கவனமாக இருந்து

13