பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுவான, அவற்றின் உன்னதமான முயற்சிகளை ஒன்றுபடுத்த வும் வலுப்படுத்த வும் உதவுகின்ற அம்சத்தை, மேலும் மேலும் தெள்ளத் தெளிவாகப் புலப்படுத்தியே வருகிறது. ஒரு தேசத்துக் காக அதன் மாபெரும் புதல்வர்கள் மேற் கொண்ட முயற்சியையும், அவர்களது போராட்டத்துக்கு உத் வேக மூட்டிய லட்சியங்களையும், அவர்களது தியாக வாழ்க்கை யையும் மனித சிந்தனை ஆழமான மதிப்போடு கூர்ந்து ஆராய் கிறது. மனிதகுல வரலாற்றில் அத்தகையதொரு தனிச்சிறப்பு மிக்க நபராக விளங்கியவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (மகாத்மா காந்தி). . இந்திய தேச விடுதலைப் போராட்டத்தில் தனிச் சிறப்பு மிக்க நபராக விளங்கிய இவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழா' வுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த நூலில், சோவியத் எழுத்தாள னும், இந்நூலுக்குக் கட்டுரைகள் எழுதியுள்ள பலரில் ஒருவனு மான நான், காந்தியின் வாழ்க்கையையும் அவரது செழுமை யான இலக்கியப் பாரம்பரியத்தையும் பற்றியோ அல்லது அவரது இடையழுத ஆன்மத் தேட்டங்களையும், அவரது கருத்துக்களின் சிக்கலான, பரிணாம வளர்ச்சியையும் பற்றியோ, இயல்பாகவே இந்திய வாசகர்களுக்குக் கூறப்போவதில்லை, இந்த விஷயம் பற்றிய விசேட விஷய ஞானத்தைக் கொண்டுள்ளவர்களான, இந்நூலுக்குக் கட்டுரைகள் எழுதியுள்ள ஏனைய ஆசிரியர்கள் இதனைப் பற்றி எழுதுவர். என்னைப் பொறுத்த வரையில், சோளியத் மக்கள் பதிகப் பலரையும் கவர்வதைப் போலவே என்னையும் மிகவும் பலமாகக் கவர்ந்துவரும் காந்தியபின், அந்தச் சமுதாய, அரசியல் தலைவரின் அந்த அம்சங்களைப்பற்றி மட்டுமே நான் இந்திய வாசகர்களோடு பேச விரும்புகிறேன். எனவே நான் எந்த விதத்திலும் காந்தியைப்பற்றி ஒரு சர்வாம்சமான ஆராய்ச்சியை மேற்கொள்ளவில்லை; அத்தகைய ஆராய்ச்சியை மேற்கொள்ள நான் என்றும் துணி ய வும் மாட்டேன்; அதனால், அவர து பலதிறப்பட்ட நடவடிக்கையின் அம்சங்கள் சிலவற்றைப் பற்றிய எனது எண்ணங்களை மட்டுமே இந்த நூ லிள் வாசகர் களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன். காந்திக்கும் ரஷ்யாவின் மாபெரும் எழுத்தாளர் டால்ஸ் டாய்க்கும் இடை யே. நிலவிய, நெருக்கம் பற்றிய வியத்தகு உண்மையை எவரேனும் காணாதிருக்க முடியுமா? இந்திய மக் களும் ரஷ்ய மக்களும் வாழ்ந்து வந்த வரலாற்று பூர்வமான நிலைமைகளில் மிகப்பெரும் வேற்றுமை நிலவியபோதிலும்கூட, அவர்களுக்குள் முன்னேற்றத்தின் பெயரால் ஒரு தொடர்பு

ஏற்படக்கூடிய சாத்தியப்பாடு, ஒரு கூட்டணி அமையக்கூடிய.

208