பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாத்தியப்பாடு, அப்போதே தோன்றியது என்பதைப் புலப் படுத்தும் ஒரு துடிப்பான உதாரணமே இது வாகும். காந்தியினால் மிகவுயர்வாகப் பாராட்டப்பெற்ற டால்ஸ்டாயின் “் இந்தியா வுக்கு ஒரு கடிதம் என்ற படைப்பைப்பற்றி மட்டுமே நான் இங்கு குறிப்பிடுகிறேன். காந்தி மற்றும் டால்ஸ்டாயின் தத்து வார்த்தக் கொள்கைக ளின் சாராம்சத்தையும் முக்கியத்துவத் தையும்பற்றி நான் பேசவில்லை; தத்துவத்திலும் சரி, தமது நடைமுறை நடவடிக்கையிலும் சரி, இரண்டிலும் போராட்டத் துக்கா னா வழிவகைகளைத் தேடுமாறு அவர்களை வற்புறுத்தியது எது என் பதைப்பற்றி மட்டுமே நான் கூற விரும்புகிறேன். ஒடுக்குமுறைக்கு எதிரான கண்டனம், தமது சொந்த மக்களின் - அதேபோல் ஓர் அயல் நாட்டு மக்களின் துன்ப துயரங்களை உாைர்ந்தறியும் திறமை- இதுதான் அவர்களது ஆன்மத் தேட்டங் களைத் தூண்டியது; இந்தியாவின் விடுதலைக்குத் தம்மை அர்ப் பணித்துக் கொண்ட போராளியும், மாபெரும் ரஷ்ய மனிதாபி மான எழுத்தாளரும் ஆன இந்த ஜாம்பவான்களையும் இதுவே ஒன்றாக இணைத்தது. இந்திய வாசகர்கள் என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். இதோ ஒரு கம்யூனிஸ்டு எழுத்தாளர் தமது சொந்தக் கண்ணோட்டத்தை நம்மீது திணிக்க முயன்று கொண்டிருக்கிறார், தமது நோக்கங் களுக்கேற்ப உண்மைகளைத் திரித்துக் கறுகிறார் என்று அவர்கள் கருத மாட்டார்கள் என்றும் நான் நம்புகிறேன். நான் எதையும் எவர் மீதும் திணிக்க முயலவில்லை. நான் வெறுமனே எனது எண்ணங்களை, எனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவே செய்கிறேன், எனது காலத்தின் அதியவசரமான கோரிக்கையை உணர்ந்து பார்க்கும் நான், நிறவெறியையும், சில தேசங்கள் பிறவற்றின் மீது மேலாண்மையுரிமை கொண்டாடுவதற்கான நிற - இன வெறிக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளாமை போன்ற காந்தி யின் ஆளுமையில் தென்படும் இத்தகைய தெள்ளத் தெளிவான போக்குகளையும், அல்லது நிறவெறி ஒடுக்குமுறையையும் காலனி ஒடுக்குமுறையையும் சகித்துக் கொள்ளாமை போன்ற அவரது உன்னதமான போக்குகளையும், எவ்வாறு மிகக்கூரிய கவனத் தோடு கூர்ந்து பார்க்காமல் இருக்க முடியும்? ஏனைய நாடுகளின் துயரங்களையும் அல்லது அவற்றைச் சுரண்டிப் பிழைப்பதையும் பயன்படுத்தி மேலோங்க முயலும் அத்தகைய தேசபக்தியைத் தாம் மறுப்பதாக காந்தி கூறியுள்ள உற்று மதிப்புக்கும் ஆழ்ந்த

கவனத்துக்கும் உரியதாகும்.

209