பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜனங்களின் இயக்கமேயாகும். அதேபோல், போராட்டத்தின் தர்க்கவியலான து, 2 * இந்தியாவை விட்டு வெளியேறு! என்று காலனியாதிக்கவாதிகளை நோக்கிச் சவுக்கடி கொடுத்தாற் போல் கோஷித்த கோஷத்துக்குக் காந்தியைக் கொண்டு வந்து சேர்த்தது என்ற உண்மையையும் நாம் உணர்ந்து பாராட்டத் தவற முடியாது. இரண்டாம் உலகப் போர் வெடித்தபோது, காந்தி பாசிசத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தார், சோவியத் மக்களோடு தாம் கொண்டிருந்த ஆழ்ந்த பரிவுணர்ச்சியை வெளியிட்டார் என்பதையும் மக்கள் என்றுமே மறக்க மாட்டார்கள். ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணு குண்டுகளை வீசியதை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்பியவர் களிலும், அணு ஆயுதங்களைத் தடை செய்யவும், முக்கியமான பிரச்சினைகளுக்குச் சமாதான பூர்வமாகத் தீர்வு காணவும், பொதுவான படைக்குறைப்பைக் கொண்டு வரவும் வேண்டும் என்று கோரியவர்களிலும் அவரும் ஒருவராக விளங்கினார். - காந்தியின் வாழ்க்கை ஓர் இடையறாத தேட்டமாக, சத்தியத்தையும், நல்லொழுக்கம் பற்றிய தமது சொந்தக் கருத்தையும், அரசியல் போராட்டத்துக்கான திட்டவட்டமான முறைகளையும், தத்துவார்த்தக் கோட்பாடுகளையும் தேடும் தேட்டமாகவே இருந்தது. அவரது தேட்டங்களின் சிக்கல் தன்மையும் நானாவிதத் தன்மையும், இந்தியாவின் வரலாற்று பூர்வமான வளர்ச்சியின் சிக்கல் தன்மையைப் பிரதிபலித்த ன. இந்திய மக்கள் “ 'ஒரு பெரிய ஆன்மா எனப் பொருள்படும் அழகிய சொல்லான * * மகாத்மா என்ற பெயரால் காந்தியைக் குறிப்பிட்டுள்ளனர். மக்களின் இந்தத் தகுதி வாய்ந்த புதல்வரான இவரது ஆன்மா, அது இந்திய மக்களின் தேட்டங்களை- விடுதலைக்கும் சுதந்திரத்துக்குமான அவர்களது தாகங்களைக்- கிரகித்துக் கொண்டும் பிரதிபலித்துக் கொண்டும் எங்கெங்கே தன்னை வெளிப்படுத்திக் கொண்டதோ, அந்த வெளிப்பாடு களிலெல்லாம், அது மிக மிக உயர்ந்து விளங்கியது என்றே நான் கருதுகிறேன். அத்தகையதோர் ஆன்மா உண்மையிலேயே மகத்தானது தான்.

1968

212