பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தாளரும் விமர்சகரும் நேர்மையாகச் செயல்பட வேண்டும் சோவியத் எழுத்தாளர்களில் பலர் (அவர்களில் இந்த வரிகளை எழுதும் ஆசிரியரும் ஒருவர்) வட்டாரப் பேச்சு வழக்கு மொழியை மிதமிஞ்சிப் பயன்படுத்த முனைகின்றனர். நம்மில் மிகப் பலர் ஏனைய இலக்கியப் பிழைகளுக்கும் அதிக அளவிலோ அல்லது குறைந்த அளவிலோ உள்ளாகிறோம். ஆயினும், எஃப். பான் ஃபெரோவ் மட்டுமே மோசமாக எழுதுவதற்கான தமது உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள முனையும்

    • துணிவைப் பெற்றிருக்கிறார்; மேலும் என்னவென்றால், இதே

போல் செய்யுமாறு அவர் அரும்பி வரும் இளம் எழுத்தாளர் களையும் தூண்டி வருகிறார், புருஸ்கி பற்றிய விவாதத்தின்போது, தாம் ஆற்றிய முடிவுரையில், பான் ஃபெரோவ் தாம் “ 'கோடிக் கணக்கான மக்களின் மொழி' ' யில் எழுதுவதாக விவேகமற்ற முறையில் கூறியபொழுது அவருக்கு ஏற்பட்ட தோல்வியைப் பற்றி எல்லோரும் அறிவர், தமது கலைநய-விரோதமான, மொழி வழக்கற்ற, சுவையற்ற எழுத்துக்களை இலக்கியத்துள் கொண்டு வந்து மானாங்காணியாய்க் குவித்து வரும் ஏராளமான சீடர்களை அவர் கொண் டிராவிட்டால், இலக்கியத் துறைத் தலைவர் என்ற பாத்திரத்துக்கு உரிமை கொண்டாட்டி வரும் பான்ஃபெரோவ், இந்த இலக்கியக் குளறுபடியாளர்களின் கும்பலுக்குத் தலைமை தாங்க முயலா திருந்தால், “நூறு வார்த்தைகளில் ஐந்து 1.மட்டுமே நல்லவையாக இருந்து, மீதி தொன்னூற்றி ஐந்தும் மோசமானவையாக இருந்தாலும், அதுவே போதும்” என்ற கோட்பாட்டுக்குக்கேற்பவே, பான்ஃபெரோவும் எழுதா திருந்தால், கார்க்கியினால் போது LOான அளவுக்குக் கடுமையாகவே விமர்சிக்கப்பட்டுள்ள

2 1 5

215