பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையின் ஆசிரியர், இலக்கியச் சிரஞ்சீவித் தன்மைக்கு பான்ஃபெரோவ் உரிமை கொண்டாடி வருவதை நிலைநாட்டவே முயன்றிருக்கிறார். புருஸ்கியின் மூன்றாவது பாகத்தில் எது நல்லது அல்லது எது கெட்டது. பான்ஃபெரோவின் பலம் எதில் அடங்கி யுள்ளது அல்லது அவரது பலவீனம் எதில் அடங்கியுள்ளது என்பவை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளத் தமது கட்டுரை வாசகருக்கு எதையும் கூறவில்லையே என்ற கவலையே: கட்டுரை யாசிரியருக்கு இல்லை. அதைப் படித்துப் பார்த்தால், அந்தக் கட்டுரை வாசகர்களுக்காக எழுதப்படவில்லை, மாறாக, பான்ஃபெரோவுக்காக மட்டுமே எழுதப்பட்டது என்ற எண்ணமே ஒருவருக்கு ஏற்படுகிறது. அது வசனத்தில் எழுதப் பட்ட ஒருவிதமான காதல் பாட்டுத்தான். தமது குறைபாடுகளை பான்ஃபெரோல் வெற்றி கொள் வதற்கு உதவும் எந்த முயற்சியையும் வாசில் கோவ்ஸ்கி மேற் கொள்ளவில்லை. பான் ஃபெரோவின் மொழி விஷயத்தில் எல்லாமே நன்றாக இருந்துவிடவில்லை என்று எவரேனும் சொன்னார்களr? இதற்கு வாசில்கோவ்ஸ்கி ஒரு சூடான, வச தியான பதிலை வழங்கி விடுகிறார்: "பான்ஃபெரோவின் மொழி கடினமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. நல்லது , வால்கா நதிப் பிரதேச விவசாயிகளின் மொழி அப்படித்தானே உள்ளது. நிகிதா குர்யானோவ் நாகரிகப்படுத்தபட்ட மொழியில் பேசினால் அது வேடிக்கையாகத்தானே இருக்கும், எத்தனை ஈடிணையற்ற வெகுளியாக இருக்கிறார் இவர்! பான்ஃபெரோவின் கதா பாத்திரங்களின் மொழியைப்பற்றி யாரோ குறிப்பிட்டு விட்ட மாதிரி. கதையின் சம்பவம் பற்றியும் எல்லாமே நன்றாக இருந்து விடவில்லை என்று யாரேனும் கூறினார்களா? இங்கும்கூட, புருஸ்கியின் ஆசிரியரைப் பாதுகாப்பதற்காக, கடமையுணர்ச்சி மிக்க வாசில்கோவ்ஸ்கி அந்த ஆட்சேபணையையும் இவ்வாறு கூறித் தடுத்து நிறுத்துகிறார்: இந்த நூலில் சுதைச் சம்பவம் எதுவும் இல்லைதான். என்றாலும், இது ஓர் அனுகூலம், ஒரு பிரதிகூலம் ஆகிய இரண்டும்தான். பால்ஸாக்கின் விவசாயிகளைப் படித்துப் பாருங்கள், அதிலும் கதைச் சம்பவம் என்று எதுவுமே இல்லை. இதன் பின்', பான்ஃபெரோவ் சமயங்களில் தமது கதா நாயகனான நிகிதா குர்யானோவைப் போலவே நடந்து கொள் கிறார் என்று அவர் கூறும்போது இந்தக் கதாநாயகன் கிராம டமன்றத்திலிருந்து ஒரு பெஞ்சை வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டு,

  • இது 2.ட்கார்வதர்காவது அல்லது வேறு எதற்காவது சமU.Nங்

217

217