பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைக்கப்பட்ட பிறகு மட்டுமே, கலா பூர்வமான கற்பனை வடிவம், அதன் போதனை மற்றும் அரசியல் பாத்திரம் ஆகிய வற்றின் தாக்கத்தை முழுமையாக நிலை நாட்ட முடியும்.” அவர் மேலும் இவ்வாறு கூறுகிறார்: “பான்ஃபெரோவ் எழுதிய புருஸ்கியின் மூன்றாம் பாகம் வெளிவந்துள்ளது. இது விஷயத்தில் ஒரு ரசிகரோ அல்லது மதிப்பீட்டாளரோ எது வும் செய்வதற்கில்லை. இந்த நூலை அலசி ஆராயும் உரிமையைப் பெறுவதற்கு, விமர்சகர் கூட்டுடைமை யாக்க இயக்கத்தையும், கிராம வாழ்க்கையையும், கூட்டுப் பண்ணை விவசாயியையும் பற்றிய நல்ல விஷய ஞானத்தையும் பெற்றிருக்க வேண்டும்; அவர் கட்சியையும், அது கிராமப் புறத்தில் ஆற்றிவரும் பணியையும் அறிந்திருக்க வேண்டும், தொழில் முறை விமர்சகர்களான நமது மத்தியில் அத்தனை சர்வ பரிபூரணமாகக் கல்வி கற்ற நபர்கள் பலர் உள்ளனரா? மொழி அத்தகைய அற்ப முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் தான் என்றும், மொழியைப்பற்றி மட்டும் எழுதுவதே சுயமரியாதையுள்ள ஒரு விமர்சகரின் கெளரவத்துக்கு அப்பாற் பட்டதாகும் என்றும் நிச்சயமாக ஜெலின்ஸ்கி இதய பூர்வமாகக் கூற முடியாது, வெளிப் பார்வைக்கு “ஒரு-தரப்பா னதாக' 'த் தோன்றக்கூடிய ஒரு சிறிய, கா ரியார்த்தமான கட்டுரையும் கூட, வார்த்தைகள் மலிந்த, சகல விஷயங்களையும் தொடுகின்ற, மிகப் பல சமயங்களில் போலி-அறிவுமிக்க விமர்சனக் கட்டுரையைக் காட்டிலும் நூலாசிரியருக்கும் வாசகருக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும் புத்தகங்களை அவற்றின் ஆசிரியர்களது சொந்த விஷயமாக மதிப்பதையும், விமர்சகரின் 1, 6னியை, அவர் மதிப்புரை செய்யும் நூலின் வெற்றியினாலோ அல்லது தோல்வியினாலோ, லாபமோ அல்லது நஷ்டமோ அடைவதற்கில்லாத ஓர் இடைத்தட்டு நபரின் பணி யா க மதிப்பதையும், நாம் நிறுத்தியாக வேண்டியதற்குக் காலம் வந்து விட்டது, சர்வ பூரணமாகக் கல்வி கற்ற” பிரிவின ரில் சேராத ஒரு விமர்சகரது பணியைப் பற்றி நான் வேறுவிதமான கருத்தை மேற்கொள்ளவே முனைகிறேன். அவர் எதார்த்தத்தை நன்கு தெரிந்து கொண்டிருந்தால், வாழ்க்கையைத் தமது சொந்தக் கண்களாலேயே பார்த்திருந் தாலும் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும், ஆனால் அவ்வாறு தெரிந்து கொண்டிராவிட்டால், அவர் குறைந்தபட்சம் நூலின் மொழி பற்றியாவது எழுதட்டும்; இந்த ஒரு வகையில்தான் என்றாலும், நூலாசிரியரது நூல்கள்.

220

220