பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற் கொண்டிராவிட்டால், அவரது புருஸ்லீ இன்னும் மேலான கலை நயத் தரத்தோடு எழுதப்பட்டிருக்கக் கூடும். எவ்வாறா யினும், அந்த நூலாசிரியரின் கவனத்துக்கு கார்க்கி கொண்டு வந்துள்ள அந்த ** அறியாப் பிழைகள் அதில் இடம் பெற்றிருக்காது. பான்ஃபெரோவின் தரக்குறைவான படைப்பை நியாயம் படுத்த முனையும் ஓர் அவசரமான விருப்பத்தோடு துடிதுடித்துக் கொண்டிருக்கும் ஏ. எம். செராஃபிமோவிச் எழுதியுள்ள “எழுத்தாளர்களைப் பற்றி--அழகுப்படுத்தப்பட்டுள்ளவர்களையும், அழகுபடுத்தப் படாதவர்களையும் பற்றி' என்ற கட்டுரை, வித்தரத்துர்னயா கெஜட்டா சஞ்சிகையின் தலையங்கத்திலும், மற்றும் கார்க்கியின் பகிரங்கக் கடிதத்திலும் தகுதியான முறையில் கண்டிக்கப்பட்டது. புருஸ்கியின் மூன்றாவது பாகத்தில் வரும் கற்பனை வடிவத்தை, செராஃபிமோவிச் வியந்து பாராட்டு வதைக் கண்டால், ஒருவருக்கு கலக்க உணர்ச்சியைத் தவிர வேறு ஏற்படாது. அவர் அதனை அந்தப் பேர்போன **மூஜிக் பல' 'த்துக்குச் சான்றாக மேற்கோள் காட்டுகிறார்; செரா ஃபிமோவிச்சின் கருத்துப்படி, அந்தப் பலம் பான் ஃபெரோவிடமே வேரூன்றியுள்ளது : '< “ஏ, மனிதா! தனது பிருஷ்ட பாகத்தின் மீது குந்தி யிருக்கும் ஒரு குதிரையை ஏன் வேலிக்கு அருகில் வைத்திருக் கிறாய்? அது வேலியையே அசை போட்டுக் கொண்டிருக்கிறது!' சற்று நில்லுங்கள்; இந்தக் கற்பனா வடிவத்தின் அர்த்தத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். எவ்வளவு விஷயம் சொல்லப்பட்டு விட்டது! அதுவும் எவ்வளவு கச்சிதமாக! தனது பிருஷ்ட பாகத்தின் மீது குந்தியிருக்கும் ஒரு குதிரை? ஏன், இதை நீங்கள் என்றுமே, என்றென்றும், மறக்க மாட்டீர்கள், இது பயங்கரமாக உள்ளது! என்று வியப்புற்றுப் போகிறார் செராஃபிமோவிச்.

  • இதுவல்ல, இந்தக் கற்பனா வடிவம்தான் அசம்பாவிதமான

முறையில், சுத்த அறிவில்லாத முறையில் பயங்கரமாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு வற்றி மெலிந்த குதிரை குந்தியமர் வதில்லை; அது படுத்து விடுகிறது; மேலும் அது அமரும்போது {அதுவும் அது எழுந்து நிற்க முயலும் போதுதான் அவ்வாறு செய்கிறது). அது தின்பதில்லை. ஒரு குதிரை எழுந்திருக்கவும் எழுந்து நிற்கவும் சக்தியற்றுப் போய் விட்டால், அது தூக்கி நிறுத்தப்படுகிறது. மேலும் அதற்குத் தாங்கலும் கொடுக்கப் படுகிறது, எனவே, இது ஒரு கற்பனா வடிவம் அல்ல; இதுவும் மற்றொரு * * பேனாப் பிழை' ' தான். குதிரை வேலியை (அசை

2 22

222