பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போடுகிறது என்ற கருத்தும், கறும் பித் தின் பது', அசை போடுவது என்ற சொற்களுக்கிடையே எந்த வித்தி யாசத்தையும் காணாதவர்களைத் தவிர, மற்றவர்களைத் திணற வைக்கத்தான் செய்கிறது. கார்க்கி பின்வருமாறு சொன்னார் என்றால், அவர் கூறியது ஆயிரம் முறை சரியானதே: “'யாரோ ஒருவர் பதிப்பாசிரியராக இருக்கிறார்; எவரோ ஒருவர் இந்த வார்த்தைக் குப்பைகளை உன் கணக்கில் பிரசுரிக்கிறார்; யாரோ சில பொறுப்பற்ற நபர் கள் இந்தப் பொறுப்பற்ற அரைவேக்காட்டுப் பேர்வழிகளின் படைப்புக்களைப் பாராட்டுகிறார்கள், அவர்கள் இவ்வாறு பாராட்டுவதற்கு, அவர்களுக்கு எதுவும் சரியாகத் தெ ரிய வில்லை அல்லது அவர்களுக்குச் சொந்தக் காரணங்கள் உள்ளன என்பதுதான் காரணம் என்பது தெளிவு. பான்ஃபெரோவின் தரக்குறைவான நூலைப் பாராட்டவும், நியாயப்படுத்தவும், அலெக்ஸாந்தர் செரா ஃபிமோவிச்சைத் தூண்டியது அவரது " 'கோஷ்டி” அனுதாபங்களே தவிர , அவரது நட்புறவுத் தொடர்புகள் அல்ல என்றே நான் கருதுகிறேன். அவர் தமது முதிய வயதில் மனச்சாட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டு விட்டார், அவர் அப்படிச் செய்திருக்கக் கூடாது . இலக்கியத்தைப்பற்றி ஒரு நேரான ,. அச்சமற்ற முறையில் பேச வேண்டிய, குப்பையைக் குப்பை என்று சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டது. நமக்குப் புரட்சியினால் உருவாக்கப்பட்ட அத்தாட்சி பூர்வமான புதிய வார்த்தைகள் தேவை; தமக்குப் புதுமையான வடிவங்களும், மனிதகுல வரலாற்றில் மிகப் பெரும் சகாப்தத்தை வருணித்துக் கூறும் புதிய புத்தகங் களும் தேவை; ஆனால், எழுத்தாளர்களான நாம், புதிய வார்த்தை களை இலக்கியத்துக்குள் கொண்டு வரவும், பான்ஃபெரோவின் சமையல் குறிப்புக்கு ஏற்றாற்போல் இல்லாமல், அதற்கு மாறான முறையில் புத்தங்களை எழுதவும், கற்றுக்கொள்ளும்போதுதான், இந்தச் சகாப்தத்துக்குத் தகுதியான புத்தகங்களைப் படைக்க நம்மால் முடியும்: ஒவ்வொரு நூறு வார்த்தைகளிலும் 95 வார்த்தைகள் அற்புதமானவையாக இருக்க வேண்டும்; மீதி யுள்ள ஐந்தும் நல்லவையாக இருக்க வேண்டும்; மேலும், ஓர் அத்தியாயத்தை அத்தியாயம் என்று கூறாமல் , “அதிர் வேட்டு',

  • 'கண்ணி*' என்றெல்லாம் கூறும் இத்தகைய ஆரம்ப கால

எத்து சித்து வேலைகளையெல்லாம் தாண்டி, புதுமை காண்பது மிகவும் முன்னே றியாக வேண்டும். நமது விமர்சகர்கள் ஓர் எழுத்தாளரின்மீது தாராளமாகத் தமது பாராட்டுரைகளை வா ரிப் பொழிவதையும், அவர்பால் ஒரு

233

223