பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஷ்யப் பழக்க வழக்கங்களைப் பொறுத்த வரையில், ஏனைய எந்தவொரு நாட்டின் பழக்க வழக்கங்களைக் காட்டிலும் அவை மிகவும் கொடூரமானவையா என்று நான் சந்தேகிக்கிறேன், மேலும், 3 9! 8-! 92 -ல் சித்திரவதைக்குள்ளாகியிருந்த எனது தாயகத்துக்கு எதிராகத் தமது படைகளைச் சாடச் செய்து , ஆயுத பலத்தின் மூலம் ரஷ்ய மக்களின்மீது தமது விருப்பத்தைத் திணிக்க முயன்ற அந்தப் பண்பட்ட நாடுகள் மிகவும் கொடூர மாகவும் மனிதத்தன்மையற்ற முறையிலும் நடந்து கொள்ள வில்லையா? 1934 இலக்கியம் பொதுவான பாட்டாளி வர்க்க லட்சியத்தில் ஒரு பகுதியாகும் {லென்ஜாவோடுத் தொழிற்சாலை மற்றும் ராஸ்தான் 'ரயில்வே ஜங்ஷன் ஆகியவற்றின் தொழிலாளர்களா து: அதிரடிப் - படையினரின் கூட்டமொன்றில் ஆற்றிய 2.5ரையிலிருந்து) தோழர்களே, முதலாவதாக, ரஷ்யாவின் விடுதலைக்கான புரட்சிகரப் போராட்ட வரலாற்றில் மிகவும் அற்புதமான பக்கங்களில் ஒன்றை எழுதியுள்ள லென்ஜாவே!!”டுத் தொழிற் சாலை மற்றும் ராஸ்தாவ் ரயில்வே ஜங்ஷன் ஆகியவற்றைச் சேர்ந்த பாட்டாளிகளுக்கு, சோவியத் எழுத்தாளர் யூனியனது மிகமிக உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்க என்னை அனுமதியுங்கள். இன்று, லென்ஜாவோடுத் தொழிற்சாலையின் மு தி 4 தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, தோழர் லெனினது தனிச்சிறப்பு மிக்க சிந்தனைகளில் ஒன்று, இலக்கியம் பொதுவான பாட்டாளிவர்க்க லட்சியத்தின் பகுதியாக மாற வேண்டும்” என்ற ஒரு விருப்பத்தின் வடிவில் அவர் ஒருமுறை தெரிவித்த கருத்து, எனக்கு நினைவு வந்தது. இந்த விருப்பம் இப்போது உண்மையாகி வருகிறது. மேலும் இதற்கு மிகவும் துடிப்பான எடுத்துக்காட்டு, கார்க்கியின்' கட்டுரையின் மூலம் தொடங்கப் பெற்ற மொழி பற்றிய விவாதத்தைத் தொடர்ந்து கவனித்து வருவதில், தொழிலாளி வர்க்கம் காட்டிய மிகப் பெரும் கூரிய கவனமேயாகும். மேலும், நமது காலத்தில், நமது சகாப்தத்தில் இலக்கியம் உண்மையில் பொதுவான பாட்டாளி வர்க்க லட்சியத்தின் பகுதியாக மாறிவிட்டது என்ற உண்மையை இன்னும் தெள்ளத் தெளிவாக உறுதிப்படுத்தும் சான்றை, ஒரு மாதத்துக்கு முன்னால் நடைபெற்ற எழுத்தாளர் களின் அகில-யூனியன் காங்கிரசின் பணியில், தொழிலாளி 226

ம மொழி, கார்க்கிலும் ,

226