பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறேன், எப்போதும்போல் நான் இளம் மக்கள் சாதனையையும், துணிவாற்றலையும், வெற்றியையும் பெறுமாறு வாழ்த்துகிறேன்.* இந்தச் சந்திப்பின்போது உரையாடல் வாழ்வின் பல பிரச்சினைகளைப் பற்றியும், இளம் எழுத்தாளர்களும் கவிஞர்களும் எந்தப் படைப்பாக்க மார்க்கங்களில் உருவாகி வந்தார்களோ அந்த மார்க்கங்களைப் பற்றியும் மீண்டும் திரும்பியது. இந்தப் பணிக்கே அவர்கள் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்துக் கொள்ளக் கூடாது என்று ஷோலகோவ் அவர்களை எச்சரித்தார்; ' எந்தவோர் 2.ண்மையான கலைஞனும் வாழ்க்கையிலிருந்து - தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது என்பதை அவர் களுக்கு நிலை வூட்டினார், எழுத்துக்கலையின் ஒவ்வோர் அம்சத்தி லும் திறம் பெற வேண்டியதன், ஒரு படைப்பில் ஒவ்வொரு. வார்த்தையையும், செம்மையுறச் செய்ய விடாப்பிடியோடு போராட வேண் டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், ஷோலகோவுக்கும் இளம் எழுத்தாளர்களுக்கும் நடைபெறும் உரையாடல்கள் இலக்கியத்தின் உடன டியான பிரச்சினைகளைச் சுற்றியே நடைபெறுகின்றன; மக்களது வாழ்க்கையில் கலைஞனுக் குள்ள ஸ்தானமும், நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் அவனுக்குள்ள கடமையும் எப்போதுமே விவாதிக்கப்படுகின்றdar', ஆயினும் பிற சந்திப்புக்களின்போது, உதாரணமாக, இளம் ஆலைத் தொழிலாளர்கள் அல்லது விவசாயிகள், விண்வெளி வீரர்கள், போர்வீரர்கள், மாலுமிகள், மாணவர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசும்போதும் அல்லது பள்ளிப் பிள்ளைகளோடு அவர் நடத்தும் கடிதப் போக்குவரத்துக்களின் போதும் எழுப்பப்படும் பிரச்சினைகளும், தொட்டுக் காட்டப்படும் மானிட நடவடிக்கைத் துறைகளும் முற்றிலும் வேறானவையே. ஆயினும், நேர்முகமாகவோ அல்லது அச்சடித்த . பக்கங் களின் மூலமாகவோ நடைபெறும் இந்தச் சந்திப்புக்கள் யாவும், இளைய தலைமுறையின் வருங்காலத்தின் பக்கமே , வருங்காலத்தின் பக்கமே, தமது சொந்த மக்களின் வருங்காலம் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுவரும் இன்றைய நிகழ்காலத்தின் பக்கமே எப்போதும் தமது சிந்தனைகளைச் செலுத்திவரும் ஒரு மாபெரும் , எழுத்தாளரின், பிரஜையின் "இதயத்தின் கட்டளைப்படியே நிகழ்கின்றன. இந்தச் சமயத்தில், டான் நதி அமைதியாக ஒடுகிறது, கன்னி, நிலம் உழப்பட்டது ஆகிய நவீனங்களை எழுதிய அந்த எழுத் தாளரின் படைப்பாக்க வாழ்க்கையிலிருந்து சில முக்கியமான

அம்சங்களைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமாகும் எனத்

15