பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வர்க்கமும் சோவியத் மக்கள் அனைவரும் காட்டிய மிகப்பெரும் ஆர்வமே வழங்கியது , வெளியிடப்படும் எங்களது புத்தகங்களது பிரதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதானது--காங்கிரசில் கலந்து கொண்ட அயல் நாட்டு நூலாசிரியர்களுக்கு, பதிப்புக்களின் அளவே முற்றிலும் நம்புதற்கரியதாகத் தோற்றியது நமது வாசகர்களின் கலாசார முன்னேற்றத்துக்கான ஒரே அறிகுறி யாக இருந்துவிடக் கூடாது என்று நான் கருதுகிறேன். ' எழுத்தாளர்களான எங்களோடு வாசகர்கள் அன்றாடத் தொடர்பைக் கொண்டுள்ளனர்; வேறு எதைக்காட்டிலும் இதுவே அவர்களது கலாசாரத் தரத்துக்கு மிகவும் ஆணித்தர மாகச் சான்று பகர்கின்றது. இதனை நான் எனது சொந்த அனுபவத்திலிருந்தே அறிவேன் என்றே கூறவேண்டும்: கன்னி நிலம் உழப்பட்டது என்ற நூலைப் பற்றியும், அதில் வரும் கதா பாத்திரங்களைப் பற்றியும் கூறுவதற்கு ஏதேனும் விஷ யமுள்ள வாசகர்களிடமிருந்து எனக்கு ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் பத்துக் கடிதங்களாவது வருகின்றன. நன்கு பிரபலமாகி யுள்ள விமர்சகர்களின் கட்டுரைகளைக் காட்டிலும் இந்தக் கடிதங்களில் சில, தொழிலில் ஏறத்தாழ நல்ல தேர்ச்சி பெற்று விட்ட எழுத்தாளனான எனக்கு, மிகவும் உதவிகரமாயுள்ளன, உான் நதி அமைதியாக ஓடுகிறது என்ற நாவலை நான் எழுதிக் கொண்டிருந்த காலத்தில், உ.லோகத் தொழிலாளர்களின் லெனின்கிராடுப் பிராந்திய யூனியனோடு நான் நெருங்கிய தொடர்பை மேற்கொண்டிருந்தேன்; நூற்றுக்கணக்கில் அவர் கனிடமிருந்து வந்து சேர்ந்த கருத்துரைகள். நான் எனது முதல் புத்தகங்களை எழுதிக் கொண்டிருந்தபோது இழைக்க நேர்ந்த பிழைகளைப் புரிந்து கொள்ளவும் அவற்றைத் திருத்திக் கொள்ளவும் எனக்கு மிகவும் உதவின. சோவியத் யூனியனது எழுத்தாளர்களுக்கும் தொழிலாளி வாசகர்களுக்கும் உள்ள தொடர்பானது, நமது இலக்கியம் உலகின் தலை:Jாய் இலக்கிய மாகத் தொடர்ந்து நிலவிவரும் என்பதற்கான ஒரு பலமான உத்தரவாதமாகும் என்பது எனது ஆய்ந்து தெளிந்த அபிப் பிராயமாகும். உங்களிற் பலர்-நிச்சயமாகப் பெரும்பான்மையான வார் கள்--- காங்கிரசின் பணியைக் கவனமாகத் தொடர்ந்து கவனித்து வந்திருப்பீர்கள், அதன் பிரதான அறிக்கைகளையும் நன்கு தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் கருதுவதால், எழுத் தாளர்களது காங்கிரசில் என்ன நடந்தது என்பதைப் பற்றி உங்களிடம் சொல்லிக் கொள்வதோடு மட்டும் நான் நின்றுவிட

2 27

227