பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது ஒரு கூட்டுப் பண்ணையைப்பற்றிய கதை என்றால் அவர்கள் இவ்வாறு கூறுவார்கள்: கட்சி ஸெல், காம்சொமால் மற்றும் கட்சியின் நடவடிக்கைகள், பெண்களின் வளர்ந்தோங்கி வரும் சமூக நிலை ஆகியவற்றைப் பற்றியெல்லாம் இந்த நூலாசிரியர் ஓர் உண்மையான சித்திரத்தை வழங்கியுள்ளார்; என் றாலும், இவர் எப்படி கூட்டுறவைப் புறக்கணிக்க முடியும்? அதைப்பற்றி இவர் ஏன் ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை? மக்கள் உண்மையிலேயே மனத்தில் கொள்ள வேண்டி..! நல்ல பழமொழி ஒன்றுண்டு: மிகவும் எழில்வாய்ந்த குமரி தன்னிடம் இருப்பதற்கு மேல் எதையும் தர முடியாது. இன்னொரு பழமொழியும் உண்டு: ஒரு மனிதன் ஒரே சமயத்தில் விசில் அடிக்கவும், குடிக்கவும் முடியாது. என்றாலும், மக்கள் அடிக்கடி எழுத்தாளர்கள் மீது விவேகமற்ற கோரிக்கைகளைச் சுமத்துகிறார்கள்; நமது நாட்டில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும் நிகழ்ந்து வரும் எல்லா நிகழ்ச்சிகளை யும், எல்லா மாற்றங்களையும், எல்லா வளர்ச்சி களையும் அரவணைத்துக் கொள்ளக்கூடிய. அவற்றை அவற்றின் மிகப் பெரும் நானாவிதமான அம்சங்களோடும் எடுத்துக்கூறக் கூடிய ஓர் எழுத்தாளர் உலகில் இருக்கவில்லை என்பதையே அவர்கள் மறந்து விடுகின்றனர். இன்று நீங்கள் விவரித்துக் கூறுகிற ஒரு தொழிற்சாலை ஒரு வருடம் போனால் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிடும். பொதுவான திசைவழி என்ற பெயரில் வெளிவரவிருந்த தமது திரைப்படத்தின் விஷயத்தில் ஈசென்ஸ்டீன் மாட்டிக்கொண்ட அதே ச ங் க ட ம ா ன நிலைமையிலேயே எழுதுகின்ற ஒவ்வொரு நபரும் மாட்டிக் கொள்ளக் கூடும். 1928-29, அதாவது விவசாயப் பண்ணை வீடுகளை, குட்டிக் கூட்டுப் பண்ணைகளாக ஒன்று கூட்டுவதற்குக் கட்சி சகல முயற்சியும் செய்து வந்த காலத்தில், அவர் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கும் வேலையைத் தொடங்கினார். இந்த முயற்சியின்போது பணம் செலவிடப்பட்டது; கடன்கள் வழங்கப்பட்டன; விவசாயக் கழகங்களும் நிறுவப்பட்டன; தனித்தனிச் சம்பவங்கள் என்ற முறையில் இவை யாவும் உண்மைதான். இதுதான் அந்தக் குறிப்பிட்ட கால கட்டத்தின்

  • பொதுவான திசைவழி' யாக இருந்தது, 1930-ல்,

ஈசென்ஸ்டீன் தமது திரைப்படத்தை இன்னும் எடுத்துக் கொண்டிருந்த பொழுது, பெருவாரியான அளவில் கூட்டுடைமை யாக்கம் தொடங்கப்பட்டு விட்டது. எனவே அந்தத் திரைப்படம் காலத்துக்குப் பின்தங்கி விட்டது; அதனைத் தயாரிப்பதில் இதன்

பின் எந்த அர்த்தமும் இருக்கவில்லை.

232