பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லிருந்தும் இளம் எழுத்தாளர்கள் தோன் றிக் கொண்டிருக் கின்றனர்; அவர்கள் எங்களது உதவியோடும் ஆதரவோடும் எங்கள் இடத்துக்கு வரப்போகும் நபர்களாதலால், எழுதும் கலை யில் அவர்கள் திறமை பெற வேண்டுமே என்று நாங்கள் கவலை கொள்கிறோம், அவர்களது வளர்ச்சிக்கு நாங்களே பெரிதும் பொறுப்புள்ளவர்கள், ஆயினும் நாங்கள் என்ன செய்கிறோம்? தாங்கள் வெறுமனே இலக்கியச் சிறப்புக்களே இல்லாத தரக் குறைவான புத்தகங்களை உற்பத்தி செய்கிறோம்; அதன்மூலம் - இளம் எழுத்தாளர்களின் வளர்ச்சியைக் குன்றச் செய்கிறோம்; அதுமட்டுமல்ல; இதன் மூலம் உண்மையில் நாங்கள் நமது இளம் தலைமுறையினரின் கல்வியின் மீது ஒரு பாதகமான விளைவையே ஏற்படுத்துகிறோம். வசைமொழிகளை எழுத்தாளர்கள் மிதமிஞ்சிப் பயன்படுத்து வதையும் வாசகர்கள் முற்றிலும் நியாயமாகவே ஆட்சேபித் தனர்; இந்த வார்த்தைகள் தொழிலாளர்கள் மத்தியில் இப்போது அவ்வளவு அதிகமாகப் பேச்சு வழக்கில் இல்லை என்பதைக் கண்டும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்; உண்மையில் அவை கடந்த காலத்தின் ஓர் அவமானகரமான மிச்ச சொச்சம் தான். மிகப்பல சமயங்களில் நமது எழுத்தாளர் கள் (என்னையும் சேர்த்துத்தான்), இவை 2.ரையாடல்களை வாழ்க்கைக்கு மிகவும் ஒட்டியதாக ஆக்கிவிடுகின்றன என்று கருதினார்கள்; என்றாலும் அவர்கள் தமது புத்தகங்களைப் படிப்பவர்கள் இத்தகைய பச்சைத்தனத்தை ஒரு புன்னகையோடு படித்துவிட்டுப் போகும் வயது வந்த பெரியவர்கள் மட்டுமல்ல, மாறாக, புத்தகங்களில் கண்டறியும் சொற் பிரயோகங்களையும், “ 'கெட்ட வார்த்தை 'களையும் தாமும் பயன்படுத்தத் தொடங்கிவிடும் பதின் மூன்று அல்லது பதினான்கு வயதான சிறுவர் சிறுமியரும் படிக்கிறார்கள் என்பதை மறந்து விட்டனர். இந்தப் பிரச்சினையைக் குறித்து ஒவ்வொரு எழுத்தாளருமே சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று நான் கருதுகிறேன், தொழிலாளி வர்க்கத்துக்கும் நம் து கட்சிக்கும் நாம் எவ்வாறு மிகச்சிறந்த முறையில் பாடுபட முடியும், நமது. மாபெரும் சகாப்தத்தை நாம் எந்தெந்த வழிகளில் சித்திரித்துக் காட்ட வேண்டும், நமது புத்தகங்கள் மேலும் முயற்சிகளில் ஈடு படுமாறு நமது சோவியத் வாசகர்களுக்குச் சக்தியை உருவேற்றுவதோடு, முதலாளித்துவ நுகத்தடியிலிருந்து தம்மைத் தாமே விடுவித்துக் கொள்வதற்கு, காலனி மற்றும் அரைக்காலனி நாடுகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், மற்றும் மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த பாட்டாளிகளுக்கும்

234

234