பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவர், இந்தக் கமிட்டியின் நடவடிக்கையில் தாம் ஏமாற்ற மடைந்து விட்டதாகக் கூறியுள்ளதை நான் நினைவு கூர்கிறேன். “ஏமாற்றமடைதல் என்பது எங்கள் காதில் விசித்திரமாக ஒலிக்கும் ஒரு வினைச் சொல்லாகும். இன்றைய உறவு நிலையில், இது எங்களது சொற் பிரயோக வழக்குக்கே முற்றிலும் அன்னிய மானதாகும், தலையிடாமையை எதார்த்தத்தில் ஸ் பெயின் குடியரசுக்கு எதிரான முற்றுகைக்கோர் மூடுதிரையாக மாற்றி யுள்ள லண்டன் கமிட்டியின் கொள்கையைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். *'மனிதாபிமானம் மிக்க முடிவுகள் என்ற முகமூடியின் கீழ். தலையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முடிவேயில்லாத சலுகைகள் என்ற தந்திரத்தை நாங்கள் காணும் போது எங்கள் இதயங்கள் கோபாவேசத்தால் பொங்கிக் குமுறு கின்றன, ஸ்பெயின் குடியரசின் வீரஞ்செறிந்த போராட்டத்தை நாங்கள் இடையறாத கவனத்தோடு கவனித்து வருகிறோம், சிறிது காலத்திற்கு முன்னால், காட்டலோனியாவில் டிராட்கிஸ்டு- பாசிஸ்டுக் கும்பல்கள், அராஜகவாதக் கோஷ்டிகள் சிலவற்றைச் செயல்படத் தூண்டிவிட்டதன் மூலம், பொதுஜன முன்னணியைத் தகர்க்கும் நோக்கத்தோடு குடியரசுக் கட்சி முலை யின் பின்னணியில் ஒரு கலகத்தை உருவாக்க முயன்ற சம்பவம் போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டு நாங்கள் பெரிதும் மனம் கலங்கியுள்ளோம் • இங்கு எங்களது சொந்தப் புரட்சியையும் ஒருவர் நினைந்து பார்க்காமல் இருக்க முடியாது. சோவியத் ஆட்சி தொழிலாளி வர்க்கத்தின் எதிரிகளுக்கு எதிராக ஒரு விட்டுக் கொடுக்காத போராட்டத்தை நடத்தியது என்பதையும், நாங்கள் வெற்றி பெற்றோம் என்றால், அதற்குக் காரணம் நாங்கள் லட்சியத்துக்குத் துரோகம் இழைத்த துரோகிகள் அனைவரையும் ஈவிரக்கமற்று அடித்து நொறுக்கி முறியடித்தோம் என்பதையும் எல்லோரும் அறிவர், ' ஸ்பானிய மக்களின் பிரதிநிதிக் குழு தாம் சோவியத் யூனியனில் தங்கியிருக்கும் காலத்தில், சோவியத் நாட்டின் எந்தெந்த மூலைக்குச் செல்ல நேர்ந்தாலும், ஸ்பெயினில் நிகழ்ந்து வரும் நிகழ்ச்சிகளின்பால் ஆழமான அக்கறை கொண்ட மனப்பான்மையும், குடியரசுக்காகப் போராடி வருபவர்களின் பால் உண்மையான, உளமார்ந்த பரிவும் நிலவுவதை உங்களது வீரமிக்க தோழர்கள் எங்கணுமே காண்டார்கள், நான் வெஷென்ஸ்காயாவில் வசித்து வருகிறேன் ; தமது சுதந்திரத்துக் காகப் போராடி வரும் ஸ்பானிய மக்களின் உன்னதமான

239

239