பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த மிகவும் திறமை படைத்த கவிஞரின் சடலத்தின் முன்னால் நான் தலை வணங்குகிறேன். 2937 ஒரு போல்ஷ்விக் எழுத்தாளர் ஜனவரி 19 ஆம் தேதியன்று நாம் அலெக்ஸாந்தர் செராஃபிமோவிச்சின் 75ஆவது பிறந்த நாளைக் கொண்டாடப் போகிறோம். செராஃபிமோவிச்சுக்கு 75 வயதாகிவிட்டது என்பதை நினைத்துப் பார்த்தால்! அவர்தான் எத்தகைய கவர்ச்சிகரமான, ஆண்மைமிக்க முதுமையைக் கொண்டிருக் கிறார்! நீங்கள் அவரோடு இருக்கும்போது, இந்த மனிதர் 75 வயதின் அருகே சற்றேனும் நெருங்கிவிட்டவராக உங்களால் நம்பவே முடியாது, அவர் அவ்வளவு திடகாத் திரமும் ஆரோக்கியமும் சுமூக பாவமும் மிக்கவராக இருக்கிறார்! அவருடன் , சேர்ந்து இருக்கும் போது நீங்கள் எப்போதும் உங் களுக்கு இளமை திரும்பிவிட்டதுபோல் உணர்வீர்கள், இந்த முதியவரின்மீது நான் மிகவும் பிரியம் கொண்டவன். அவர் ஓர் உண்மையான கலைஞர்; ஒரு பெரிய மனிதர்; அவரது புத்தகங்களை நாம் அனைவரும் அறிவோம்; அவற்றை நாம் மிகவும் நன்றாக விரும்பவும் செய்கிறோம், இளம் எழுத்தாளர் களான நாங்கள், எந்த எழுத்தாளர்களிடமிருந்து கற்றுக் கொண்டோமோ, அந்த எழுத்தாளர்களது பரம்பரையைச் சேர்ந்தவர் செராஃபிமோவிச். நான் சொந்த முறையில் அவருக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறேன்; ஏனெனில் எனது இலக்கிய வாழ்வின் தொடக்கத்தில் ஓர் எழுத்தாளர் என்ற முறையில் அவர்தான் முதன் முதலில் எனக்கு ஆதரவு கொடுத்தார்; ஊக்கமும் அங்கீகாரமும் வழங்கும் ஒரு சொல்லை என்னிடம் முதன் முதலில் சொன்ன வரும் அவர்தான். 1925-ல் செராஃபிமோவிச் என து முதல் சிறு கதைத் தொகுதியைப் படித்துப் பார்த்த பின்னர், அதற்கு அவர் மிகவும் உளங்கனிந்த முகவுரை ஒன்றை எழுதியதையும், அதற்கும் மேலாக, தாம் என்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறியதையும் நான் என் றுமே மறக்க மாட்டேன். நாங்கள் சோவியத்துக்களின் மாளிகையில்தான் முதன் முறையாகச் சந்தித்தோம். ஓர் எழுத்தாளன் ஆவதற்கான அம்சங்கள் என்னிடம் இருந்ததாக செராஃபிமோவிச் எனக்கு உறுதி யளித்தார். தொடர்ந்து எழுதிக் கொண் டிருக்குமாறும், நான் எழுதும் ஒவ்வொரு பகுதியிலும் மிகவும் அக்கறையோடு

247

241