பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன் அவர் இருந்ததைப் டோலவே, இன்.றும் அவர் அத்தனை சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் மிக்கவராக இருக்கிறார். உணர்வில் இத்தனை இள்மை மிக்கவராக விளங்கும் இந்தக் களைப்பே அறியாத வயதான மனிதரை, காலத்தால் ஊடுருவ முடியாத பிறவியாக ஆக்கும் ஏதோ ஒன்று இருக்கத்தான் வேண்டும். வெஷென்ஸ்காயாவுக்கு செராஃபிமோவிச் வருகை தந்ததை நான் நினைவு கூர்கிறேன். அவர் என்னோடு பல நாட்கள் தங்கி னார். டான் நதியில் தண்ணீர் எவ்வளவு குளிர்ச்சியாக இருந்த போதிலும் சரி, செராஃபிமோவிச் தாம் அதில் அன்றாடம் நீந்து வதை என்றுமே ரத்துச் செய்ததில்லை, எப் போதும் கவனத்தோடு முகச் சவரம் செய்து கொண்டும், குளித்த பின்னர் புத்துணர்வு பெற்றவராக மாறிக் கொண்டும் இருந்த இந்த மனிதரின் அலுப்புச் சலிப்பே அறியாத வற்றாத ஆற்றலைக் கண்டு நான் அதிசயித்தேன். அவர்தான் எத்தனை இளமை மிக்க ஆன்மாவைப் பெற்றிருக் கிறார்! 1938 18 ஆவது கட்சிக் காங்கிரசில் ஆற்றிய உரையிலிருந்து தோழர்களே, இந்த மேடை மீது ஏறிவரும்போது எனக்குச் சற்று நடுக்கம் கண்டது. எனக்கு ஏற்பட்ட இந்த நடுக்கவுணர்ச்சிக்குக் காரணம், பெரிய பெரிய தொகுதியான-நானே வருந்தும் விதத்தில் முற்றுப் பெறாத நிலையிலுள்ள நாவல்களை எழுதி வரும் ஓர் எழுத்தாளர் என்ற அவப்புகழை நான் பெற்றிருப் பதுதான். எனவே அடுத்த பேச்சாளராக எனது பெயரைத் தலைவர் அறிவித்தவுடனேயே நீங்கள் இவ்வாறு பேசிக் கொள் வீர்கள் என்று நான் நினைத்துக் கொண்டேன்: “ஒஹோ! இவர் தான் ஷோலகோ வா? சளைக்காது எழுதிக் கொண்டே செல்லும், எனினும் தமது நூல்களை என்றுமே பூர்த்தி செய்து முடிக்காத நபர் இவர்தானா? ஒருவேளை இங்கும் தலைவர் கொடுத்த கால வரம்பு முடிந்து விட்டது என்று இவருக்கு நினைவூட்டும் வரையி லும், இவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பாரா? நீங்கள் இவ்வாறு நினைத்துப் பார்த்துவிட்டால், பிறகு இங்கிருந்து நீங் கள் அர வம் காட்டாமல் மெல்ல வெ ளியே நழுவிச் செல்ல வும் தொடங்கி விடுவீர்கள். நல்லது. நீங்கள் உங்கள் ஆசனங்களை.

243

243