பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • 'தோழர்களே, பாசிஸ்டுகள் நம்மீது பலவந்தமாகத்

திணித்து வரும் போர் விஷயத்தில் சோவியத் எழுத்தாளர்களின் மனப்போக்குப் பற்றியும் சில வார்த்தைகள், வருங்காலத்தில் அளவிலும் சரி, தரத்திலும் சரி, நாம் உற்பத்தியின் சில பிரிவு களில் தலையாய இடத்தை எட்டிப் பிடிப்போம் என்று நம்பும் அதே சமயத்தில், எழுத்தாளர்களாகிய நாம் விஞ்சிக் செல்ல எந்த விதத்திலும் விரும்பாத ஒரு பிரிவு உண்டு-தற்காப்புத் தொழில் துறையைத்தான் 'நான் இவ்வாறு குறிப்பிடுகிறேன், காரணம், முதலாவதாக அதனை எந்தவிதத்திலும் மிஞ்சிவிட முடியாது என்பது ; இரண்டாவது காரணம், அது அத்தகைய தொரு நல்ல ஜீவாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரிவாகும்; அதனை மிஞ்ச முயல்வது முற்றிலும் கண்ணியமற்றதாகும். அது தம் அனைவரின் நன்மைக்காகவும், நமது எதிரிகளின் அழிவுக் காகவும் வளரட்டும்; செழித்தோங்கட்டும்,

    • சோவியத் எழுத்தாளர்கள் உணர்ச்சி மேலீடு மிக்க மேற்கு

ஐரோப்பிய அமைதிவாதிகளின் இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. எதிரி நமது நாட்டைத் தாக்கினால், சோவியத் எழுத் தாளர்களான நாம் நமது பேனாக்களைக் கீழே வைத்துவிட்டு, கட்சி மற்றும் ' அரசாங்கத்தின் அறைகூவலுக்குச் செவி சாய்த்து, வேறோர் ஆயுதத்தைக் கையில் ஏந்துவோம்; தோழர் வொரோ ஷிலோவ் பேசியபடி, துப்பாக்கிப்படை பிரிவு சுட்டுத் தள்ளும் தோட்டாக்கள் மழையில், நமது தோட்டாக்களின் ஈயமும் இருக்கும்; அவை பாசிசத்தின்பால் நாம் கொண்டுள்ள பகைமையைப் போலவே கனமாகவும் சூடாகவும் இருந்து, எதிரியைத் தாக்கி அவனை வெட்டி வீழ்த்தும்.

    • செஞ்சேனையின் அணிகளில், அதன் மகோன்னதமான

செம்பதாகைகளின் கீழ், நமக்கு முன்னால் எவருமே இதுவரை செய்திராத விதத்தில், நாம் எதிரியை அடித்து நொறுக்குவோம், பிரதிநிதித் தோழர்களே, நாங்கள் எங்களது வரைபடப் பேழைகளைக் கைவிடப் போவதில்லை என்றும் நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன்- இவ்வாறு கைவிடும் இந்த ஜப்பானியப் பழக்கம் எங்களுக்கு ஒவ்வாததாகும். மாறாக, நாம் மற்றவர் களின் வரைபடப் பேழைகளைப் பொறுக்கியெடுத்து வருவோம்; ஏனெனில் அவற்றில் உள்ள விஷயங்கள் பின்னால் நமது இலக்கியத் தொழிலில் நமக்கு மிகவும் பயன்மிக்கவையாக இருக்கும். எதிரியை முறிய படித்த பின்னால், நாம் அதனை எப்படிச் செய்து முடித்தோம் என்பதை வருணிக்கும். புத்தகங் களை நாம் எழுதுவோம். இந்தப் புத்தகங்கள் நமது மக்க ளுக்கு

ஆற்றும் சேவையாக விளங்கும்; எஞ்சிமிஞ்சியுள்ள ஆக்கிர

248