பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிப்பாளர்கள் எவரேனும் இருந்தால் அவர்களுக்கும் அவை ஓர் எச்சரிக்கையாக இருக்கும். ' 'தோழர்களே, உங்களிற் பலரையும் போலவே, என் வாழ்க்கையில் முதன்முறையாக நான் ஒரு கட்சிக் காங்கிரசில் பிரசன்னமாகியிருக்கிறேன். ' க ட் சி ய ா ல் வளர்க்கப்பட்ட சோவியத் அறிவுத் துறையினரின் முதல் குருத்துக்கள் நாம் என்று நாம் பெருமிதத்தோடு சொல்லிக் கொள்ள முடியும். நமக்குப் பின்னால், லட்சோப லட்சக்கணக்கான மக்கள் வரு வார்கள். அவர்களுக்குக் கலாசாரம் அவர்களது வாழ்க்கையின் பகுதியாகவே இருக்கும். 1939 மிகப்பெரிய கலைஞர் அலெக்சி டால்ஸ்டாய் பெரிய ரஷ்ய உள்ளமும், நானாவித மான பெருந்திறமையும் படைத்த எழுத்தாளராக இருந்தார். லட்சக்கணக்கான வாசகர்கள் மத்தியில் அவர் அடைந்துள்ள பிரபலம், அலுப்புச் சலிப்பேயறியாத பல்லாண்டுக்கால உழைப்பின் மூலம் அவர் சம்பாதித்த அன்பு, எழுதப்படும் வார்த்தைகளைச் சரியானபடி வேலை வாங்கும் அவரது முறை ஆகியவையெல்லாம் உண்மையிலேயே மிகப்பெரியவை ; நல்ல , தகுதியும் பெற்றவை. ஒரு குழந்தைக் கதையா கட்டும், சரித்திர நாவலாகட்டும், அல்லது யுத்த காலக் கதையாகட்டும், அவை யாவையும், அவரது பலமும் வேலை வாங்கும் திறனும் மிக்க கரங்களால் உயிர்த்து படிப்போடு ஜொலிக்கும் வர்ண ஜாலங்களையும், அதே போல் ஒரு சிற்ப வடிவின் வியத்தகும் பிரத்தியட்சத் தன்மையை யும் பெற்றன. இதனை உண்மைக் கலைஞரால் மட்டுமே சாதிக்க முடியும். மாபெரும் தேசபக்தப் போர்க்காலத்தில் தாம் எழுதிய கட்டுரைகளில், அலெக்சி டால்ஸ்டாய் ஒரு மக்கட் பிரதிநிதியின் கோபாவேசமான மொழியில் பேசினார்; அவரது குரலைப் போர் முனையில் இருந்த போர்வீரர்களும், அந்த மாபெரும் போரில் வெற்றி பெறுவதற்காகப் பின்னணியிலிருந்து பாடுபட்டுச் செஞ்சேனைக்கு உதவிவந்த மக்களும் கூர்ந்த கவனத்தோடு கேட்டனர். ஜெர்மானியர்கள் மாஸ்கோவை நோக்கி முன்னேறி வந்து கொண் டிருந்த அந்த மோசமான நாட்களில், தமது நாட்டு மக்களிடம் எல்லையற்ற நம்பிக்கை கொண்டிருந்த ஓர் உண்மை '.

249

249