பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்கள் புத்தகத்தைப்பற்றி உங்களோடு பேச வேண்டு மென்று நான் நெடு நாட்களாக விரும்பி வந்துள்ளேன். வெளிப் படையாகச் சொன் னால், மாபெரும் தேசபக்தப் போரைப்பற்றி ஒரு நாவலை எழுதும்போ து, நீங்கள் ஒரு விஷயத்தை , எனது கருத்தின் படி, மிகமிக முக்கியமான விஷயத்தைக் காணத்தவறி விடக்கூடாதே என்று நான் கவலைப்பட்டேன்.” இதன்பின் எனது வருங்கால நூலில் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்று தாம் கருதிய விஷயம் பற்றி மிக்கேல் இவானோவிச் என்னிடம் கூறத் தொடங்கினார். நான் பதிலளிக்கையில் என் மனத்தில் இருந்த கருத்தைக் கூறி, அதைப் பற்றி என்னால் முடிந்த அளவுக்கு மிகவும் சிறப்பாகவே எழுத முயல்கிறேன் என்று கூறினேன். நான் இவ்வாறு கூறும் போது, அந்த நேரத்தில் தமக்குத் தாமே ஒரு சிகரெட்டை உருட்டித் தயார் செய்து கொண்டிருந்த மிக்கேல் இவானோ விச், தமது பளபளக்கும் மூக்குக் கண்ணாடி யின் வழியாக என்னைக் களி பொங்கும் பார்வையோடு பார்த்தார்; முதியவரின் இனிய புன்னகையொன்றையும் புரிந்தார்; அந்தப் புன்னகை அவரது முகம் முழு வேதையுமே ஒளிரச் செய்வது போல் தோன்றியது. அப்படியென்றால் சரிதான், மிகவும் நல்லது. எனவே நான் கவலைப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறிவிட்டு, பின்னர் மிகவும் கா ரியார்த்தமிக்க முறையில் இவ்வாறு கூறத் தொடங்கினார்: “'பாருங்கள், வாசகர்களான நாங்கள் எழுத்தாளர்களான உங்களிடமிருந்து விரும்புவது வெறுமனே புத்தகங்கள் அல்ல; நமது வாழ்க்கையைப் பற்றிய முழுமையான சித்திரத்தை வழங்கும் நல்ல புத்தகங்களையே விரும்புகிறோம். எனவே தான் உங்கள் திட்டங்களில் தலையிடுகிறேன் என்று கூறலாம். மேலும், முக்கியமாக, எடுத்துக்கொள்ளப்படும் கருப் பொருள், நமது மக்கள் வெற்றி யோடும் கீர்த்தியோடும், கடந்து கரையேறிய, கடந்த போர் போன்ற வெல்லற்கரிய போர் நிகழ்ச்சியாக இருக்கும்போது, நாங்கள் உண்மையான புத்தகங்களை, அதாவது நூற்றாண்டுக் கணக்கில் இல்லாவிட்டாலும் சில பத்தாண்டுகளுக்காவது வாழ்ந்து வரக் கூடிய அத்தகைய புத்தகங்களைப் படிக்கவே விரும்புகிறோம். சில நூலாசிரியர்கள் விஷயத்தில் இதெல்லாம் எப்படியிருக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள் : அவர்கள் கதை நிகழ்ச்சி தமது மனத்தில் சரிவர உருப்பெறுவதற்கே கால அவகாசம் கொடுப்பதில்லை; அதைப் பற்றி நன்றாகச்

சிந்தித்துப் பார்க்கவே அவர்கள் சிரமம் எடுத்துக் கொள்வதில்லை,

253