பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லை. எனினும் அதே சமயம் எனக்குச் சில நாட்களுக்கு முன் னால் தமது புதிய புத்தகத்தை அனுப்பி வைத்திருந்த ஒரு முதிய புத்திசா வியான எழுத்தாளருக்கு நான் பதில் எழுதத் தயங்கவில்லை. அவரது புத்தகம் சப்பென்று மோசமாக இருக்கிறது என்று நான் அவருக்குப் பதில் எழுதினேன்.

  • புத்தகம் மோசம்!' என்று அவரிடம் நான் நேரிடையாகவே

கூறிவிட்டேன்.” மிக்கேல் இவானோவிச் மௌனமானார் ; பின்னர் தமது கைவிரல் நுனிகளால் மேஜை மீது தாளமிட்டவாறே, தமது சொந்தச் சிந்தனை எதிலோ மூழ்கிப் புன்னகை புரிந்தார். பிறகு அவர் மேலும் பேசத் தொடங்கினார்: “* சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் தி பிலிஸியில் சிறையில் இருந்த காலத்தில், பிரபல நூலாசிரியர் ஒருவரின் புத்தகம் ஒன்று என் கைக்குக் கிட்டியது. நான் சிறைக் கொட்டடில் தனியாக இருந்தேன்; மேலும் இந்த ஒரே ஒரு புத்தகம்தான் என்னிடம் இருந்தது. எனவே அந்தப் புத்தகத்தைத் திரும்பத் திரும்ப எண்ணற்ற முறைகள் படித்தேன். எனவே நான் அதனை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருக்கத்தானே வேண்டும். இல்லையா? ஆனால் என்னை விடுதலை செய்த மறுகணமே நான் அதனை முற்றிலும் மறந்து விட்டேன். அதன் பின் அதனை மீண்டும் படிக்க வேண்டும் என்ற உணர்வும் எனக்கு என்றுமே தோன்றவில்லை. அது உண்மையான இலக்கியம் அல்ல; எனவேதான் அப்படி... ஆனால் டால்ஸ்டாயாகவோ அல்லது செகாவாகவோ இருந்தால், நாம் அவர்களது கதைகை. ஒரே ஒரு முறை படித்தாலும், அதை எப்போதும் ' நினைவில் வைத்திருக்கிறோம்; அது நமது நினைவிலேயே சித்திரமாகப் பதிந்து தங்கி விடுகிறது, மேலும், நாம் அந்தக் கதையை நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் படித்தது போல் இல்லாமல், ஏதோ நேற்றுத்தான் அதனைப் படித்ததுபோல் கதை முழுவதும் நமக்கு நன்கு தெரிந்தே இருக்கிறது. நிச்சயமாகச் சொல்லப் போனால், 'அமரத்துவம்' வாய்ந்த எழுத்தாளர்களின் நூல்களும்கூட, அவை உருவத்தில் மிகவும் செம்மையாக எழுதப்பட்டிருந்த போதிலும், அவை ஈடுபாடில்லாத கையால் எழுதப்பட்டுள்ளன; எனவே நாம் ஏதோ தண்ணென்று குளிர்ந்த ஒரு சலவைக் கல் பாளத்தின் மீது கை வைத்து விட்டது போல், அவை நமது இதயத்தில் ஒரு சில்லிட்ட உணர்ச்சியையே ஏற்படுத்துகின்றன. , . மிக்கேல் இவானோவிச் தமது சிறிய, வறண்ட கையை மேஜை மீது வைத்துத் தமது கருத்தை ஒரு சிறிய சைகையின் மூலம் புலப்படுத்திக் காட்டினார்; அந்தச் சைகை அங்குக் கூடி

255.

255