பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நம்மிடம் அத்தகைய விரைவைக் கோரியது. நானும்கூட அப்போது விரைவாகத்தான் எழுதினேன். எனினும்கூட, வாசகர்கள் நான் எவ்வாறு எழுத வேண்டும் என்று விரும்பக் கூடுமோ அதைக் காட்டிலும் மிகவும் மெதுவாகவே எழுதும் உரிமையை நான் எனக்கு நானே வைத்துக் கொள்கிறேன்; ஏனெனில் இந்த மெது வான போக்கு தரத்தினால் ஈடுகட்டப்படும் என்று நான் நம்புகிறேன். எனது புத்தகங்கள் பல பதிப்புக்களாக வெளிவந்து கொண் டிருக்கின்றன என்ற உண்மையே, முக்கியமான சமுதாய வளர்ச்சிப் போக்குகளை ("மெதுவான பணியின் மூலம் பிரதி பலித்துக் காட்ட முடியும் என்பதையே நிரூபிக்கிறது. விரைவாக எழுதுவதன் மூலம் ஒருவர் மோசமான புத்தகங் களை உருவாக்கக்கூடும்; மெதுவாக எழுதுவதன் மூலம் நல்ல புத்தகங்களை உருவாக்க முடியும். சோவியத் இலக்கியத்தின் இடையறாது வளர்ந்து வரும் செல்வாக்கையும் பிரபலத்தையும் பின் வரும் ஒரே உதாரணத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். அண்மையில் போலந்தில் விராக்லோவில் நடந்த கலாசார ஊழியர்களின் உலக சமா தான மாநாட்டில், அன்டிலெஸ் ஸிலிருந்து வந்திருந்த ஒரு பிரதிநிதி தம்மிடம் மிஞ்சியிருந்த கடைசி இரண்டு பவுன் நாணயங்களையும், டான் நதி அமைதியாக ஓடுகிறது என்ற எனது நாவலின் மொழி பெயர்ப்பொன்றை வாங்குவதற்குப் பயன் படுத்தியதாக என்னிடம் கூறினார். நமது சோவியத் இலக்கியம் உலகின் தூரா தொலை மூலைகளிலும் கூடப் புகுத்து விட்டது என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. என்ன தான் இருந்தாலும், சோவியத் யூனியனில் மட்டும் தான் எழுத்தாளர்களான நாம் படைப்பாக்கப் பணிக்குத் தேவையான எல்லா நிலைமைகளையும் பெற்றிருக்கிறோம். எனவே நாம் நன்றாக எழுதித்தான் ஆக வேண்டும், நான் என் வாழ்க்கை முழுவதும் சோவியத் மக்களுக்குப் பணியாற்றியுள்ளேன்; இனியும் நான் எனது சர்வத்தையும் ஈடுபடுத்தி இந்த மக்களுக்கு என்றென்றும் பணியாற்றி வருவேன். செப்டம்பர், 1948 ஒரு வானொலி உரை - சோவியத் நூலாசிரியர்கள் தமது வாசகர்களுக்குச் செலுத்த வேண்டிய ஒரு நீடித்த கடனுக்கு ஆட்பட்டுள்ளனர்,

259

259