பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு முற்றுப்பெறாத நாவல்களின் ஆசிரியரான நானும் கூட, அந்தக் கடனாளிகளில் ஒருவன் என்பதை மிகுந்த வருத்தத் தோடும் அந்தரங்கமான மனச்சங்கடத்தோடும் உணர்கிறேன்; எனினும் நான் கடனாளிகளில் ஒருவனே தவிர, கடனைச் செலுத்தத் தவறுபவர்களில் ஒருவனல்ல, எங்கள் வசமுள்ள கலா சாதனத்தைக் கொண்டு நாங்கள் வாழ்க்கை வேகத்தோடு எட்டி நடை போட்டு வரவே முடிய வில்லை, எங்களது அதிக நேரம் பிடிக்கும் நுணுக்கமான வேலையின் காரணமாக நாங்கள் பின் தங்கி நிற்பதைத் தவிர வேறு வழியில்லாத வகையில், நமது நாடு கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் அதன் முன்னேற்றத்தில், அத்தனை படு வேகத்தைப் பெற்றுள்ளது, அத்தகைய ராட்சச அடிகளை எடுத்து வைத்து முன்னேறிச் செல்லுகிறது என்பதே எங்களது ஒரே சால்ஜாப்பும் ஆறுதலும் ஆகும். நாங்கள் எங்களால் முடிந்தவரையில் அவசரம் அவசரமாகத் தான் வருகிறோம்; என்றாலும் முடிவு வரையிலும் மூச்சு வாங்கிக் கொண்டே ஓடி வர எங்களால் முடியவில்லை. எனவே நிகழ்வது இதுதான்: எழுத்தாளர் மார்ச் மாதத்தின் மொட்டையான மரக்கிளைகளையும், வசந்த காலத்துக்காக முற்றி வீங்கி வரும் புதிய தளிர்களையும் மிகவும் சிரமப்பட்டு வருளித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், அந்த மரமானது அதற்குள் தனது முதல் பசை பிடித்த சிறு இலைகளை வெளிக் காட்டிவிடும். இந்தக் காட்சியைக் கண்டு மலைப்பும், தமது சொந்த மந்தப் போக்கைக் கண்டு அதிர்ச்சியும் அடையும் அந்த எழுத்தாளர் அவசரம் அவசரமாக இலைகளை வருணித்து எழுதத் தொடங்குகிறார்; ஆனால் அதனை எழுதி முடிப்பதற்குள், அந்த மரமானது தனது அழகிய வசந்த கால மலர்களையெல்லாம் உதிர்த்து விட்டுக் காய் காய்க்கத் தொடங்கி விடுகிறது ...... பெரிய நாவல்களை எழுதி வரும் எங்கள் விஷயத்தில் இப்படித்தான் நிகழ்ந்து விடுகிறது. சிறுகதைகள் விஷயத்தில் இப்படி நிகழ்வதில்லை; ஏனெனில் அவற்றுக்கு இயல்பாகவே குறைந்த முயற்சியே தேவைப்படுகிறது; அத்துடன் அவற்றை எழுதி முடிப்பதற்கு ஒப்புநோக்குக்கே இடமில்லாத வகையில் மிகவும் குறைந்த நேரமே பிடிக்கிறது, 'என்னைப் பொறுத்தவரையில், தற்போது நான் கன்னி நிலம் 22.ழப்பட்டது என்ற எனது நாவலின் கடைசிப் பாகத்தையும், அவர்கள் தமது நாட்டுக்காகப் போராடினார்கள் என்ற நாவலின்

முதல் பாகத்தையும் ஏககாலத்தில் எழுதி வருகிறேன்,

260