பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்கள் அனுமதியோடு சொல்கிறேன்-நான் வாக்குறுதிகள் எதையும் வழங்கவில்லை. நாம் எதைப்பற்றி, எப்படி எழுதி வருகிறோமோ, அது பற்றிய நமது பொறுப்புணர்ச்சி நம்மை விட்டுப் போகாத வரையில், நாம் எழுதி முடிப்பதற்குரிய ஒரு காலக் கெடுவை நமக்கு நாமே நிர்ணயித்துக் கொள்ள முடியாது என்பதை நான் எனது சொந்தக் கசப்பான அனுபவத்திலிருந்தே அறிவேன். ஒரு நாவலை உருவாக்குவது என்பதைக் கட்டிடம் கட்டு வதற்கு ஒப்பிடலாம். ஆனால் கட்டிட நிர்மாணத்தில் ஒவ்வொரு கட்டிட நிர்மாணியின் வேலைகளும் கடமைகளும் கண்டிப்போடு வரையறுக்கப்பட்டுள்ளன; ஆனால் ஓர் எழுத்தாளர் விஷயத் திலோ அவர் தம்மைத் தாமேதான் நம் பியிருக்க வேண்டிய தாகிறது. கட்டிட நிர்மாணம் பொருள் களைச் சேகரித்துக் கொண்டு வர வேண்டியவரும் அவர்தான், மேலும் அவர் தான்" மனைச் சிற்பியாகவும், கொத்தனாராகவும், இஞ்சினீயராகவும் இருக்கிறார். மேலும் துர்ப்பாக்கிய வசமாகப் பல சமயங்களில் , கட்டி.டத்தைக் கட்டி வரும்போதே, மனைச் சிற்பியின் திட்டங் களை ஏதோ காரணத்தினால் மாற்றியமைக்கவும் நேர்ந்து விடுகிறது : அவ்வாறு நேரும்போது கொத்தனார் ஏற்கெனவே கட்டி முடித்ததையெல்லாம் இடித்துத் தள்ள வேண்டியதாகி விடுகிறது. எனவே இத்தகையதொரு வேலையில் எவர்தான், எப்படித்தான், எந்தவொரு காலக் கெடுவை நிர்ணயிக்க முடியும்? நான் கூறுவது தவறாக இருக்கலாம்; ஆனால் எந்த விதத்திலும் சுலபமான உழைப்பாக இல்லாத எழுத் தாளனின் பணியைப் பற்றி நான் நினைத்துப் பார்க்கும்போது நான் இவ்வாறே கருதுகிறேன்: நாம் நமது அறிவினாலும் நமது கரத்தினாலும் உருவாக்கப்பட்டு வரும் கட்டிடம்' நம்பக மானதாக, உறுதியானதாக, நெடுங்காலத்துக்குப் பயன்படத் தக்கதாக இருக்கும் வரையிலும், அதைக் கட்டி முடிக்க எவ்வளவு காலம் பிடிக்க வேண்டுமோ அதைக் காட்டிலும் அதன் நிர்மாணத்துக்கு அதிகமான காலம் ஆகிவிட்டுப் போகட்டுமே. மேலும், நமது புத்திக்கூர்மை படைத்த வாசகர் நமது புத்தகத்தை மறுநாளே மறந்து விடாமல் இருந்தால் (அவ்வாறு மறந்து விடும் நிகழ்ச்சிகளும் நிகழத்தான் செய்கின்றன), பின்னொரு சமயத்தில் அதனைத் திரும்பவும் படித்துப் பார்க்க வேண்டும் என்று உணர்வாரேயானால், மேலும் அதனைப் பற்றி இன்னும் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும், என்றும் அவர் விரும்புவாரேயானால், ' 'பாரேன். இந்தப் பயல் நன்றாகத்தான்

- 26 2:

261