பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனினும் செத்துப் பிறந்த உற்சாகத்தை எழுப்பியது. இருபது ஆண்டுகளாக நம்மைத் தொல்லைப்படுத்தி வந்த பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு விட்டன என்றோ, இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது சாதனை களையும் தவறுகளையும் தொகுத்துக் காண்பதுதான் என்றோ, இந்தத் தவறுகளைக் கருத்தில் ஏற்றுக்கொண்டு விட்டு, புதிய விதிகளை ஏகமனதாக நிறைவேற்றி முடித்துவிட்ட காரணத்தால், நாம் மனப்பாரம் ஏதும் இல்லாமல் இனி பேனாவை மீண்டும் எடுத்து எழுதத் தொடங்க வேண்டியதுதான் என்றோதான் இதற்கு அர்த்தமா என்ன? நிச்சயமாக இல்லை. இந்தக் காங்கிரசில் நிலவி வரும் பேரமைதியை- இரண்டு அல்லது மூன்று பேச்சாளர்களால் மட்டும் சற்றே கலைக்கப்பட்ட பேரமைதியைச் சீர்குலைப்பதை நான் வெறுக்கிறேன்; என்றாலும் கூட, நமது இலக்கியத்தைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதையும், நம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விஷயம் என்ன என்பதையும் பற்றி, உங்கள் அனுமதியோடு, சுருக்கமாக வேனும் பேச விரும்புகிறேன். நமது பொது வான சாதனைகளைப்பற்றி இங்கு எவ்வளவோ கூறப்பட்டுள்ளது. நமது: பல தேசிய இன இலக்கியம் கடந்த இருபது ஆண்டுகளில் உண்மையிலேயே பெரும் பயன்களை ஈடட், டி. 4. 4ள்ளது என்பதையும், இலக்கிய அரங்கில் பல திறமை மிக்க எழுத்தாளர்கள் பிரவேசித்துள்ளனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. இவ்வாறெல்லாம் இருந்த போதிலும், கவர்ச்சியற்ற, மட்டமான, சுவையற்ற இலக்கியப் பிரவாகம் இலக்கியச் சஞ்சிகைகளின் பக்கங்களிலிருந்து தொடர்ந்து பொங்கி வழிந்து, சந்தையில் பெருக்கெடுத்து ஓட்டத்தான் செய்கிறது.

  • 948" து.

- ஓர் உறுதியான அணையைக் கட்டுவதன் மூலம் இந்த இருண்ட சேற்றுப் பிரவாகத்தைத் தடுத்து நிறுத்த நாம் கூட்டாக முயற்சிகளை மேற்கொள்வதற்குக் காலம் வந்து விட்டது; இல்லாவிட்டால், நமது காரியார்த்தமிக்க எழுத் தாளர்கள் அதிகமான காலத்தையும் முயற்சியையும் செல் விட்டுச் சம்பாதித்து வைத்திருக்கின்ற நமது வாசகர்களின் மதிப்பை, நாம் இழந்துவிடக் கூடிய ஆபத்திலேயே இருப்போம். இலக்கியத் துறையில் இப்போதுதான் பிரவேசித்துள்ள, ஒவ்வொரு புத்தகத்தோடும் நன்கு முன்னேறி வருகின்ற இளம் எழுத்தாளர்கள் விஷயத்தில் இது இயல்பாகவே எந்தவிதத் திலும் பொருந்தாது. மாறாக, தமது படைப்பின் பாலும்,

தமது வாசகர்களின்பாலும் கொண்டிருந்த மதிப்பை இழந்து

266