பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டு, சண்காண வாடி - வதங்கிக் கொண்டும் கீழ்நோக்கிச் சரிந்து கொண்டும், திறமை வாய்ந்த விற்பன்னர்கள் என்ற நிலை யிலிருந்து வெறும் கூலிக்கு மாரடிக்கும் எழுத்தாளர்களாக மாறி வரும் பிரபல நூலாசிரியர்களுக்கே இது பொருந்தும். கடந்த ஆண்டுகளை--கடந்த ஆண்டுகள் என்பதை, நாம் யுத்தத்துக்குப் பின்னால் கழிந்துள்ள கால கட்டத்தைத்தான் அர்த்தப்படுகிறோம் என்றால் அந்தக் கால கட்டத்தை--நாம் திரும்பிப் பார்ப்போம், யுத்த காலத்தில் இயல்பாகவே எழுத் தாளர்களில் பெரும்பாலோர், நெடுங்காலம் சிரமப்பட்டுச் சிந்தித்து உருவாக்கக் கூடிய க ைத நிகழ்ச்சிகளைக் கொண்ட பெரிய நாவல் களை, கஷ்டப் பிரசவத்தின் மூலம் பெற்றெடுக்கும் , மாசு மருவற்ற நடையழகும், செம்மையா க மெருகூட்டப் பெற்ற மொழிநயமும் மிக்க புத்தகங்களைப் பற்றிச் சிந்திக்கவும் கூட முடியவில்லை. போர்க் காலத்தில் எழுத்தாளரின் பேனா ஓர் ஆயுதமாக விளங்கியது: உருவச் செம்மையைப் பற்றிக் கவலைப்படுவதற்கே நேரம் இருக்கவில்லை. எழுத்தாளர்களுக்கு ஒரே ஒரு கடமை மட்டும்தான் இருந்தது; அதாவது எதிரியை நேராகச் சென்று தாக்கவும், நமது போர் வீரர்களுக்கு ஆதரவு பெழங்கவும், எதிரியின் பால் கொண்டிருந்த சுட்டெரிக் கும் பகைமையுணர்வையும், தமது தாயகத்தின்பால் கொண் டுள்ள 'உணர்ச்சி வேகமிக்க அன்kை்யும் சோவியத் மக்களின் இதயங்களில் கொழுந்துவிட்டு எரியச் செய்யவும் கூடிய அத்தகைய உண்மையான நோக்கத்தைத் தமது பேனாவுக்கு வழங்குவதுதான் அந்தக் கடமையாக இருந்தது. இந்தக் கடமையை எழுத்தாளர்கள் நன்றாகச் சமாளித்து முடித்தனர் என்பது அனை வரும் அறிந்ததே. ஆனால் போருக்குப் பின்னால், நமது எழுத்தாளர்களில் மிகப் பலர், தாம் அதற்கு முன் மேற் கொண்டிருந்த அதே - வேகத்திலேயே தொடர்ந்து செயல் பட்டனர்; கனெயே இல்லாமலும், அவசர கோலத்திலும் தொடர்ந்து எழுதித் தள்ளினார்கள்; இதன் விளைவாக ஏராள மான புத்தகங்களின் கலைத்தரம் பெரிதும் குறைந்து போய் விட்டது', யுத்த காலத்தில் தம்மை மன்னிப்பதற்கு வாசகர் தயாரா யிருந்ததற்கான விஷயம், போருக்குப் பின்னரும் செல்லுபடி யாகாது. மேலும், ஃபதயேவ், ஃபெதின், ஆயுஜோவ், -பாவ் லெங்கோ, கிளாத்கோவ், லியானோவ், பவுஸ்தோவ்ஸ்கி, . உப் பித்ஸ், துவர்தோவ்ஸ்கி, யாகும் கோலாஸ், கொஞ்சார்,. நெக்ரசோவ் ஆகியோரும் மற்றும் சிலரும் எழுதிய நூல்களான, உண்மையிலேயே திறமை வாய்ந்த, யுத்தப் பிற்கால இலக்கியங் கள், இலக்கியக் கருச்சிதை வுகள் என்றே சரியாகக் சொல்லக் -

267

267