பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைப்பதற்கும் காலம் வந்துவிடவில்லையா? இத னால் நான் பழைய தோட்டாக்களைத் தூக்கியெறிந்துவிட வேண்டும் என்று சொல்ல வரவில்லை; அவையும் பயன்படக்கூடும்; எனினும் அவற்றை ஒரு காரச் சத்துள்ள திரவத்தில் கழுவி எடுக்கவோ, அல்லது இதுவும் பயன் தராவிட்டால், அதனை உப்புத் தாளினால் தேய்த்துச் சுத்தம் செய்யவோ வேண்டியது அவசியம், கவலைப் படாதீர்கள். இதனால் அவற்றின் மேலுறை ஒன்றும் கழன்று வந்து விடாது. இந்தப் பழைய தோட்டாக்களையும் எக்காரணம் கொண்டும் புறக்கணித்துவிடக் கூடாது. ஏனெனில், என்னதான் இருந்தாலும், நம்மில் ஒவ்வொருவருமே தவறாகச் சுட்டுவிடப் போவதில்லை. இதையும் நாம் உணர்ந்தாக வேண்டும். ஒரே ஒரு தோட்டா உறையை மட்டும் கொண்டுள்ள போர் வீரன் பரிதாபத்துக்குரிய போர்வீரன்தான். இத்தகைய அற்பமான ஆயுதத் தளவாடத்தைக் கொண்டு, அவன் போரில் என்றுமே வெற்றிபெற முடியாது. உங்கள் எல்லோரையும் போலவே, நானும் நமது தோட்டா உறைகளில் ஏராளமான தோட்டாக்கள் இருக்க வேண்டும் என்றும், அவசியம் ஏற்படும்போது எடுத்துக் கொள்வதற்கு வசதியாகப் பெட்டி களிலும் அதிகமான தோட்டாக்கள் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். அவற்றைப் பாதுகாத்து வருவது நமது வாசகர் களின் பொறுப்பாகும். அவர்கள் ஒன்றும் கஞ்சப் பிறவிகள் அல்ல; எனினும் அதே சமயத்தில் அவர்கள் வீண்விரயத்தையும் அங்கீகரிப்பதில்லை. மேலும் இங்கு இன்னொரு விஷயத்தையும் கூற விரும்பு கிறேன். தலையாய" என்ற சொல், உண்மையிலேயே பிறருக்குத் தலைமை தாங்கிச் செல்லும் ஒரு வருக்குப் பிரயோகிக்கும்போது அது முற்றிலும் சரியான பிரயோகமே. ஆனால், ஒரு காலத்தில் தலையாய எழுத்தாளராக இருந்த ஒருவர், இனியும் யாருக்கும் தலைமை தாங்கிச் செல்லாமல், வெறுமனே அவர் காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கும்போதும் இந்தச் சொல் பிரயோகிக்கப்படுகிறது. மேலும், அவர் ஏதோ ஒரு மாதம் அல்லது ஓராண்டு என்று இல்லாமல், உதாரணமாக, என்னைப்போல் அல்லது என்னையொத்த வேறு யாரையோபோல், பத்தாண்டுகள் அல்லது அதற்கு மேலும் என்றும் காலத்தைப் டோக்கிக் கொண்டிருக்கிறார். தோழர்களே, ஒரு வரைப்பற்றி இத்தகைய விஷயங்களைப் பேசுவது அத்தனை மகிழ்ச்சிக்குரிய விஷயமல்ல என்பதை நீங்கள் சட்டென்று புரிந்து கொள்வீர்கள், என்றாலும், ஒருவர் பேசித் தானே ஆக வேண்டும்: சுயவிமர்சனம் என்பதுதான் உங்களுக்குத்

  • முர்.

272